174 கோடி ரூபாய் செலவில் 6 ஆண்டுகளாக நாசா கட்டிய கழிப்பறையின் சிறப்பம்சம் என்ன?

Universal Waste Management System என்ற பெயரில் பெண்களுக்கான கழிப்பறை ஒன்றை அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா உருவாக்கியுள்ளது. இதன் விலை சுமார் 23 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 174 கோடி ரூபாய்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 23, 2020, 09:30 PM IST
  • 174 கோடி ரூபாய் செலவில் 6 ஆண்டுகள் முயற்சியில் உருவான கழிப்பறை
  • செப்டம்பர் மாதத்திற்குள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படும்
  • Funnel-function system கொண்ட சிறப்பு கழிவறை
174 கோடி ரூபாய் செலவில் 6 ஆண்டுகளாக நாசா கட்டிய கழிப்பறையின் சிறப்பம்சம் என்ன? title=

புதுடெல்லி: Universal Waste Management System என்ற பெயரில் பெண்களுக்கான கழிப்பறை ஒன்றை அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா உருவாக்கியுள்ளது. இதன் விலை சுமார் 23 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 174 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கழிவறை இது.

இந்த கழிப்பறையை உருவாக்க நாசாவுக்கு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆனது, செப்டம்பர் மாதத்திற்குள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்த சிறப்பு கழிவறையை அனுப்பும் முயற்சிகளில் நாசா (NASA) மும்முரமாக உள்ளது.  கடந்த சில ஆண்டுகளில், விண்வெளி நிலையத்திற்கு பெண் விண்வெளி வீரர்களை அனுப்பும் வழக்கம்   அதிகரித்துள்ளது. பழைய பாணியில் அமைக்கப்பட்ட கழிவறைகளால், விண்வெளி வீராங்கனைகளுக்கு பல பிரச்சனைகள் இருந்தன.  இந்த குறையை போக்கும் வகையில் திட்டமிட்டு, சிறப்பு  கழிப்பறையை ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ளது நாசா.  இந்த கழிவறையை ஆண் பெண் என இருபாலரும் பயன்படுத்தலாம்.

Read Also | நிலவில் தங்குவதற்கு மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப நாசா திட்டம்

இதுவரை நாசா (தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம்) நாசாவில் பயன்படுத்தப்பட்டு வந்த கழிப்பறை மைக்ரோ கிராவிட்டி டாய்லெட் (microgravity toilet) என்று அழைக்கப்படுகிறது இந்த கழிவறை மலம் மறுசுழற்சி செய்யும் திறன் கொண்டது. தற்போது உருவாக்கப்படுள்ள இந்த கழிவறையானது சிறப்பு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கழிப்பறைக்கு Funnel-function system (புனல் போன்ற செயல்பாட்டு அமைப்பு) இருக்கும். இது விண்வெளி வீரர்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

பழைய கழிவறையின் எடையை விட குறைவான எடையை கொண்டுள்ள புதிய கழிப்பறை அதிக இடத்தை பிடிக்காது.   சிறுநீர் மறுசுழற்சி செய்யப்படும் வசதி உண்டு. கழிப்பறையை பயன்படுத்தும்போது விண்வெளி வீரர்களின் காலை பொருத்திக் கொள்ளும் வசதியும் இந்த சிறப்பு கழிவறையில் அமைக்கப்பட்டுள்ளது. 

Read Also | நீண்ட கால விண்வெளி பயணம் விண்வெளி வீரரின் மூளையை விரிவாக்குகிறது!

விண்வெளி நிலையத்தில் மட்டுமல்ல, இந்த கழிப்பறையை ராக்கெட்டுகள் மற்றும் விண்கலங்களிலும் பயன்படுத்தலாம். 2024 இல் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ’ஆர்ட்டெமிஸ் திட்டம்’ (Artemis Program) என்ற திட்டத்தை நாசா செயல்படுத்தவுள்ளது.  2024ஆம் ஆண்டில் நிலவுக்கு பெண் ஒருவரை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. அதன் பிறகு 2030 வரை ஒவ்வொரு ஆண்டிலும் நாசா சார்பில் நிலவுக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.    

Trending News