Airtel Offer: ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவசம்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா இலவசமாக கொடுக்கப்படுகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 1, 2022, 06:06 PM IST
  • ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்
  • ஒரு ஜிபி டேட்டா இலவசமாக பெறலாம்
  • ஜூன் 1 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் ஆஃபர்
Airtel Offer: ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவசம் title=

நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு தான். சில ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டாவை முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை எப்படி பெறுவது என்பதை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.ஏர்டெல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் 1ஜிபி இலவச அதிவேக டேட்டாவை வவுச்சர் வடிவில் வழங்குகிறது.

மேலும் படிக்க | iPhone பயனர்களுக்கு ஷாக்: திடீரென மறைந்தது இந்த அம்சம்

ப்ரீப்பெய்ட் திட்டங்களில் ஏற்கனவே ஸ்மார்ட் திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த இலவச 1 ஜிபி இலவச டேட்டா வவுச்சர் கிடைக்குமாம். இது தொடர்பான எஸ்எம்எஸ்களை ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சயடைந்துள்ளனர். நாடு முழுவதும் 5ஜி ஸ்பெக்ட்ரமை வாங்க திட்டமிட்டுள்ள இந்த நேரத்தில் இப்படி இனிப்பான செய்தியை கொடுத்துள்ளது ஏர்டெல்.  

இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் கொடுத்துள்ள அறிக்கையில் ஏர்டெல் செயலிக்கு சென்று வாடிக்கையாளர்கள் ஒரு ஜிபி இலவச டேட்டா கூப்பனை பெற்றுக் கொள்ளலாம். செயலிக்குள் சென்றவுடன் கூப்பன்கள் பகுதிக்கு சென்று ரிடீம் செய்ய வேண்டும். இந்த அதிவேக டேட்டா 3 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.அதன்படி ஜூன் 1 ஆம் தேதியான இன்றுடன் இந்த கூப்பன் காலாவதியாகிவிடும். இதுவரை இந்த சலுகை குறித்து நீங்கள் அறியாமல் இருந்தாலோ அல்லது ரெடீம் செய்யாமல் இருந்தாலோ உடனடியாக செய்துவிடுங்கள். ஏர்டெல் கொடுத்திருக்கும் அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள். 

மேலும் படிக்க | Infinix Note 12-ல் ரூ. 12,000-க்கும் மேல் சலுகை: அசத்தும் பிளிப்கார்ட்

ஒருவேளை நீங்கள் ஸ்மார்ட்பேக் ரீச்சார்ஜ் செய்யவில்லை என்றால் என்ன செய்வது என யோசிப்பீர்கள். இப்போதே ஸ்மார்ட் பேக் ரீச்சார்ஜ் செய்தால் அடுத்த 15 நிமிடங்களில் உங்களுக்கு இலவச 1 ஜிபி டேட்டா பேக் கூப்பன் கிடைத்துவிடும். ஸ்மார்ட்பேக் ரூ.99 திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்யுங்கள். கடந்த சில மாதங்களாக ஏர்டெல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.  அதன்விளைவாக மார்ச் மாத காலாண்டில் லாபம் ஈட்டியுள்ளதுடனட் 22 லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News