இனி எத்தனை சிம் வேணாலும் போட்டுக் கொள்ளலாம்! ஸ்மார்ட்போனில் புதிய புரட்சி!

சில மாதங்களில் வரவிருக்கும் "ஆண்ட்ராய்டு 13"ல் இரண்டிற்கும் மேற்பட்ட சிம்களைப் பயன்படுத்தும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 7, 2022, 07:25 PM IST
  • "ஆண்ட்ராய்டு 13"ல் இரண்டிற்கும் மேற்பட்ட சிம்களைப் பயன்படுத்தும் வசதி.
  • இந்த அம்சத்தின் மூலம் 6 சிம்கள் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிய வந்துள்ளது.
இனி எத்தனை சிம் வேணாலும் போட்டுக் கொள்ளலாம்! ஸ்மார்ட்போனில் புதிய புரட்சி! title=

இப்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான போன்களில் டூயல் சிம் வசதி மட்டுமே இருக்கிறது. இதனால் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 2 சிம் கார்டுகளை மட்டுமே ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த முடிகிறது.

இந்த நிலை இன்னும் சில நாட்களில் மாறும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த வசதியானது கூகுளின் புதிய லான்ச்சாக இந்த ஆண்டின் இறுதியில் "ஆண்ட்ராய்டு 13"இயங்குதளத்துடன் வரவிருக்கிறது.

இதுவரை வந்த ஆண்ட்ராய்டு வெர்சன்களில் இருந்து ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் மாறுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | EPFO: இந்த தேதிக்குள் வட்டி பணம் கணக்கில் வரும், இருப்பு நிலையை இப்படி தெரிந்துகொள்ளலாம் 

இந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தின் சிறப்பம்சமாக MEP (Multiple Enabled Profiles) வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் 6 சிம்கள் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிய வந்துள்ளது. 

ஆனால் நாம் தற்போது உபயோகிக்கும் சிம் கார்டை பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக இ-சிம் கார்டுகளையே பயன்படுத்த முடியுமாம்.

இதனால் போனில் சிம் கார்டுகளை செருகுவதற்கு பல ஓட்டைகள் அவசியம் இருக்காது என்பது நிம்மதி தரக்கூடிய விஷயமாக உள்ளது.

Android 13

மேலும், இந்த அம்சத்தை நமது போன்களில் ஆண்ட்ராய்டு வெர்சனை 13க்கு புதுப்பித்து பெற முடியாது என்பது நிதர்சனம்.

இந்த வசதிக்குக் கடந்த 2020-ம் ஆண்டே காப்புரிமை பெற்று கூடுதல் தொழில்நுட்ப சோதனைகளை கூகுள் நிறுவனம் செய்து வந்தது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் மற்றொரு சூப்பர் நியூஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News