Tiago Vs WagonR Vs Santro CNG: உங்களுக்கான சிறந்த கார் எது? முழு ஒப்பீடு இதோ

இந்த பதிவில் மூன்று சிறந்த சிஎன்ஜி கார்களின் சிறப்பம்சத்தைப் பற்றியும், விலையைப் பற்றியும் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2022, 12:25 PM IST
  • சில அருமையான சிஎன்ஜி கார்களைப் பற்றி இந்த பதிவில் காணவுள்ளோம்.
  • மாருதி வேகன் ஆர் இன் சிஎன்ஜி வேரியண்டில் 1.0 லிட்டர் எஞ்சின் கிடைக்கும்.
  • இந்த பிரிவில் சிஎன்ஜி ஸ்டார்ட் அம்சத்துடன் வரும் ஒரே சிஎன்ஜி கார் Tata Tiago iCNG ஆகும்.
Tiago Vs WagonR Vs Santro CNG: உங்களுக்கான சிறந்த கார் எது? முழு ஒப்பீடு இதோ title=

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கிடையில், ஆரம்பம் முதலே சிஎன்ஜி கார்களை வாங்குவதில் பல தவறான எண்ணங்களும், கேள்விகளும், குழப்பங்களும் மக்களிடையே இருந்து வருகிறது. 

இதை தெளிவுபடுத்தும் வகையில், சில அருமையான சிஎன்ஜி கார்களைப் பற்றி இந்த பதிவில் காணவுள்ளோம். இவற்றின் ஆரம்ப விலை 7 லட்ச ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. இந்த CNG கார்களில் ஹூண்டாய் சான்ட்ரோ CNG, Tata Tiago CNG மற்றும் Maruti Suzuki WagonR CNG ஆகியவை உள்ளன. இந்த பதிவில் இந்த மூன்று சிஎன்ஜி கார்களின் சிறப்பம்சத்தைப் பற்றியும், விலையைப் பற்றியும் காணலாம். இந்த ஒப்பீட்டுக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் தங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் இந்த கார்களில் தங்களுக்கு ஏற்ற கார்களை தேர்ந்தெடுக்க முடியும். 

வேகன் ஆர் சிஎன்ஜி (Wagon R CNG)

வேகன் ஆர் காரின் சிஎன்ஜி வேரியண்டில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை மாருதி (Maruti Suzuki) வழங்கியுள்ளது. இதனுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார் ப்ளே இணைப்பும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது வால்வோ பாணியில் டெயில்லைட்களைப் பெறுகிறது. 

பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள கருப்பு நிற சி-பில்லர் பின்புற ஜன்னல் மற்றும் டெயில்கேட்டைத் தொடும். மாருதி வேகன் ஆர் இன் சிஎன்ஜி வேரியண்டில் 1.0 லிட்டர் எஞ்சின் கிடைக்கும். இது 5500 ஆர்பிஎம்மில் 68பிஎஸ் ஆற்றலையும், 2500 ஆர்பிஎம்மில் 90என்எம் முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. வேகன்ஆர் சிஎன்ஜி வகைகளின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.83 லட்சம் மற்றும் ரூ.5.89 லட்சம் ஆகும்.

ஹூண்டாய் சான்ட்ரோ சிஎன்ஜி (Hyundai Santro CNG)

ஹூண்டாய் சான்ட்ரோவில் (Hyundai Santro) சிஎன்ஜி தெர்வு உள்ளது. இதன் மைலேஜ் பற்றி பேசினால், ஒரு கிலோவிற்கு 30.48 கிமீ மைலேஜ் தருகிறது. அதன் அடிப்படை மாறுபாட்டின் விலை ரூ. 4 லட்சத்து 28 ஆயிரம் மற்றும் அதன் டாப் வேரியண்டின் விலை ரூ.6 லட்சத்து 38 ஆயிரமாக உள்ளது.

ALSO READ | Second Hand Cars! மலிவு விலையில் செகண்ட் ஹாண்ட் கார்! ஹோண்டாவின் சூப்பர் ஆஃபர்! 

டாடா டியாகோ சிஎன்ஜி (Tata Tiago CNG) 

பெட்ரோல் வகைகளைப் போலவே, XE, XM, XT, XZ+ மற்றும் XZ+ டூயல்-டோன் அனைத்து எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. Tiago இரண்டிலும் பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த எஞ்சினைப் பெறுகிறது. இது, அதன் பெட்ரோல் இணையாக 1.2 லிட்டர் ரெவோட்ரான் மோட்டாரைக் கொண்டுள்ளது. 72 ஹெச்பி மற்றும் 95 என்எம் அதிகபட்ச முறுக்குவிசையின் உச்ச ஆற்றலை வெளியிடுகிறது. மோட்டார் 5-ஸ்பீடு MT உடன் மட்டுமே வருகிறது. டாடா டியாகோ சிஎன்ஜி 26.49 கிமீ/கிலோ மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது. டியாகோ சிஎன்ஜியின் விலை ரூ.6.09 லட்சத்தில் தொடங்கி ரூ.7.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது.

டாடா டியாகோ iCNG (Tata Tiago iCNG): முக்கிய அம்சங்கள்

டாடா டியாகோ (Tata Tiago) சிஎன்ஜி நாட்டின் பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார் ஆகும். குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் 4 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி இதில் பல முக்கிய பாதுகாப்பு அம்சங்களையும் நிறுவனம் வழங்கியுள்ளது. உதாரணமாக, CNG கசிவு ஏற்பட்டால், அது தானாகவே பெட்ரோலுக்கு மாறும். மேலும், தீ விபத்தை கருத்தில் கொண்டு, பயணிகள் இருக்கைக்கு அடியில் தீயணைப்பு கருவியும் வைக்கப்பட்டுள்ளது. டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் போன்ற நிலையான பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் உள்ளன. 

இதில் 1199 சிசி எஞ்சின் உள்ளது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. இந்த எஞ்சின் சிஎன்ஜி முறையில் 73 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த சிஎன்ஜி கார் இது என்று நிறுவனம் கூறுகிறது. இந்த பிரிவில் சிஎன்ஜி ஸ்டார்ட் அம்சத்துடன் வரும் ஒரே சிஎன்ஜி கார் இதுவாகும். அதாவது, உங்கள் காரில் பெட்ரோல் இல்லாவிட்டாலும், நேரடியாக சிஎன்ஜி மூலம் காரை ஸ்டார்ட் செய்யலாம். மற்ற கார்களில் இந்த வசதி இல்லை. அவை முதலில் பெட்ரோலில் ஸ்டார்ட் ஆகின்றன, அதன் பிறகு நீங்கள் சிஎன்ஜிக்கு மாற்றலாம்.

ALSO READ | 10 லட்சம் கார்களை விற்பனை செய்து டெஸ்லா சாதனை! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News