மிகக்குறைந்த விலையில் மிக அதிக மைலேஜ் அளிக்கும் டாப் 5 கார்கள்

இந்த கார்களின் விலை 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும். இந்த கார்களில் சிறந்த அம்சங்களையும் தோற்றத்தையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2021, 04:52 PM IST
  • மாருதி சுஸுகியின் ஆல்ட்டோ கார், நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ளது.
  • ரெனால்ட் க்விட், மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது.
  • Tata Tiago ஹேட்ச்பேக் காரும் அதன் மைலேஜ் மற்றும் விலை காரணமாக மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது.
மிகக்குறைந்த விலையில் மிக அதிக மைலேஜ் அளிக்கும் டாப் 5 கார்கள் title=

Best Low Budget Cars: குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் காரை வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? அப்படி என்றால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். மிகக் குறைந்த விலையில் மிக அதிக திறன் கொண்ட 3 சிறந்த கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்த கார்களின் விலை 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும். இது தவிர, இந்த கார்களில் சிறந்த அம்சங்களையும் தோற்றத்தையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

1. மாருதி சுஸுகி ஆல்டோ

மாருதி சுஸுகியின் ஆல்ட்டோ கார், நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ளது. இதற்குக் காரணம் அதன் மிகக் குறைந்த விலை மற்றும் வலுவான மைலேஜ் ஆகியவை ஆகும். மாருதி சுஸுகி ஆல்ட்டோ (Maruti Suzuki Alto) மூலம் ஏராளமான நடுத்தர குடும்பங்களின் கார் கனவு நனவாகியுள்ளது.

இந்த காரை ஒரு லிட்டர் பெட்ரோலில் 22.05 கிமீ வரை ஓட்ட முடியும். அதன் சிஎன்ஜி மாறுபாடு லிட்டருக்கு 31.59 கிமீ மைலேஜ் தரும். மாருதி சுஸுகி ஆல்டோவின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3.15 லட்சமாகவும், சிஎன்ஜி மாடலின் ஆரம்ப விலை ரூ.4.75 லட்சமாகவும் உள்ளது.

ரிமோட் கீலெஸ் என்ட்ரி, டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், மொபைல் டாக், ஏபிஎஸ், எலக்ட்ரானிக் மல்டி டிரிப்மீட்டர், டிஜிட்டல் ஓடோமீட்டர், டூயல் டோன் டேஷ்போர்டு, அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்லைட் போன்ற பல அம்சங்களை காரில் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த கார் 796 சிசி பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இது 40.36 பிஎச்பி பவரையும், 60 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது.

2. ரெனால்ட் க்விட்

சிறிய கார்கள் மத்தியில் வேகமாக பிரபலமடைந்து வரும் ரெனால்ட் க்விட் (Renault Kwid), மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது. இந்த காரின் விலை குறைவாக இருந்தாலும் அம்சங்கள் மற்றும் தோற்றத்தில் பல விலையுயர்ந்த கார்களுடன் இது போட்டி போடுகிறது.

ALSO READ: Kia alias Carens: இந்தியாவில் அறிமுகமாகும் Kia MPV காரின் பெயர் 'கேரன்ஸ்'

ரெனால்ட் ஹேட்ச்பேக் காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3.32 லட்சம் ஆகும். இந்த கார் ஒரு சிறிய குடும்பத்திற்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த கார் 21 முதல் 22 கிமீ மைலேஜ் (Mileage) தருகிறது. இந்த காரில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர், பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 68 ஹெச்பி அதிகபட்ச பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது.

3. டாடா டியாகோ

இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தயாரிக்கும் Tata Tiago ஹேட்ச்பேக் காரும் அதன் மைலேஜ் மற்றும் விலை காரணமாக மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இந்த காரின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதற்கு Global NCAP இன் பாதுகாப்பு மதிப்பீட்டில் 4 நட்சத்திரங்கள் கிடைத்துள்ளத்து.

இந்த காரின் சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில், இந்த காரில் 15 இன்ச் அலாய் வீல்களுடன் பின்புற டிஃபோகர், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இந்த அமைப்பை Apple Car Play மற்றும் Android Auto உடன் இணைக்க முடியும்.

இன்ஜின் பற்றி பேசுகையில், டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 84 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இதன் விலை ரூ. 4.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது டீசல் இன்ஜினில் 27.39 கிமீ மைலேஜையும், பெட்ரோல் எஞ்சினில் 23.84 கிமீ மைலேஜையும் தருகிறது.

ALSO READ:Best Selling Car: இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் கார் இதுதான், உங்ககிட்ட இருக்கா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News