Foldable மொபைல் வாங்க ஆசையா... ரூ. 60 ஆயிரம் வரை தள்ளுபடி - வந்தாச்சு Vivo X Fold 3 Pro

Vivo X Fold 3 Pro Price: Vivo நிறுவனத்தின் புதிய Foldable மொபைல் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதன் விலை என்ன மற்றும் தற்போது அதற்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 13, 2024, 02:50 PM IST
  • இந்த மொபைல் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.
  • இந்த மொபைல் ஒரே ஒரு வண்ணத்தில்தான் கிடைக்கிறது.
  • Vivo இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் Foldable மொபைல் இதுதான்.
Foldable மொபைல் வாங்க ஆசையா... ரூ. 60 ஆயிரம் வரை தள்ளுபடி - வந்தாச்சு Vivo X Fold 3 Pro title=

Vivo X Fold 3 Pro Price: Vivo நிறுவனம் அதன் புதிய Foldable (மடக்கும் வகையிலான) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் களமிறக்கியிருக்கிறது. அதன் Vivo X Fold 3 Pro மொபைலை கடந்த வாரமே அறிமுகப்படுத்திய நிலையில் அது இன்று முதல் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இந்த மொபலை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் மற்றும் Vivo நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்திலேயே ஆர்டர் செய்யலாம்.

முதல் Foldable மொபைல்

Vivo X Fold 3 Pro மொபைல்தான் Vivo நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் Foldable ஸ்மார்ட்போனாகும். அந்த வகையில், Vivo X Fold 3 Pro மொபைலின் வேரியண்ட், அதன் விலை, அதன் சிறப்பம்சங்கள், தற்போதை விற்பனயைில் கிடைக்கும் ஆப்பர்கள், தள்ளுபடிகள் ஆகியவற்றை இதில் காணலாம். மேலும், இந்த மொபைல் கருப்பு நிறத்தில் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேரியண்டும் ஒன்றே ஒன்றுதான் தற்போதைக்கு. அவற்றை விரிவாக காணலாம். 

இந்தியாவில் Vivo X Fold 3 Pro மொபைல் இந்தியாவில் 16ஜிபி RAM, 512ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை 1 லட்சத்து 59 ஆயிரத்து 999 ரூபாயில் கிடைக்கும். மேலும் இதில் சில தள்ளுபடிகளும் இப்போது உங்களுக்கு கிடைக்கும. ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, AMEX, ஹெச்எஸ்பிசி வங்கி உள்ளிட்ட கார்டுகளில் நீங்கள் இந்த மொபலை வாங்கனீர்கள் என்றால் Vivo உங்களுக்கு அதன் விலையில் 10 சதவீதம் தள்ளுபபடியை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Xiaomi 14 Civi மொபைலுக்கு பதில் இந்த 5 ஸ்மார்ட்போன்களையும் நீங்கள் வாங்கலாம்!

Vivo தள்ளுபடி

அது மட்டுமின்றி நீங்கள் வேறு Vivo மொபைலை எக்ஸ்சேஞ்சில் கொடுத்து இந்த மொபைலை வாங்குகிறீர்கள் என்றால் சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி கிடைக்கும். மேலும், இதனை நீங்கள் மாதத் தவணை செலுத்தியும் வாங்கிக்கொள்ளலாம். 24 மாதங்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி மாதம் 6 ஆயிரத்து 666 ரூபாய் செலுத்தி இந்த மொபைலை நீங்கள் வாங்கலாம்.

பிளிப்கார்ட் தள்ளுபடி

அதுமட்டுமின்றி, பிளிப்கார்டில் இந்த மொபைலை வாங்கினால் 12 மாதங்களுக்கு Spotify Premium சந்தா இலவசமாக கிடைக்கும். மேலும், சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் நீங்கள் பிளிப்கார்டில் மொபைல் வாங்கினால் 15 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். அதேபோல், பிளிப்கார்டில் எக்ஸ்சேஞ்ச ஆப்பரில் 60 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். 

முக்கிய அம்சங்கள்

Vivo X Fold 3 Pro 5ஜி மொபைலில் 6.53 இன்ச் AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே உள்ளது, இதன்  ரெஸ்சோல்யூஷன் 2748x1172 பிக்சல் ஆகும்.  மேலும், உட்புறத்தில் 8.03 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இதன் ரெஸ்சோல்யூஷன் 2480x2200 பிக்சல் ஆகும். மேலும் இந்த மொபைலில் Qualcomm Snapdragon 8 Gen 3 சிஸ்டம் ஆன் சிப் உள்ளது. இதோடு 16ஜிபி RAM மற்றும் 512 இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 14 அமைப்பைச் சேர்ந்த Funtouch OS14 மூலம் இது இயங்குகிறது. மேலும் இதில் 5,700mAh பேட்டரியும், 100W பிளாஷ் சார்ஜ் வசதியும் உள்ளது. 

இந்த மொபைலின் கேமரா அமைப்பு பார்த்தோமானால், கவர் ஸ்கிரீனில் 32MP கேமரா உள்ளது. மேலும் உட்புறத்தில் முன்பக்கம் 32MP கேமரா உள்ளது. அதுமட்டுமின்றி பின்புறம் மூன்று அமைப்பு கேமரா உள்ளது. 50MP+50MP+64MP என மூன்று கேமராக்களும் வெவ்வேறு அம்சங்களை கொடுக்கும். இதில் வீடியோ மற்றும் போட்டோ ஆகியவை அசத்தலாக இருக்கும், இரவு - பகல் என்றில்லாமல் எந்த சூழலிலும், எந்த நேரத்திலும் நீங்கள் இதில் வீடியோ, போட்டோ எடுக்கலாம். 

மேலும் படிக்க | நோக்கியா 3210 புதிய மொபைல் இந்தியாவில் அறிமுகம்! யூடியூப் முதல் UPI வரை - விலை ரூ.3999
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News