டீப் பேக் குறித்து பிரதமர் மோடி கவலை... போலி வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?

How To Identify Deep Fake Videos: டீப் பேக் தொழில்நுட்பம் தற்போது பெரும் அச்சுறுத்தலை கிளப்பி உள்ள நிலையில், அதனை போலி என கண்டுபிடிப்பதற்கான வழிகளை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 17, 2023, 05:05 PM IST
  • நடிகைகளின் டீப் பேக் வீடியோக்கள் சமீபத்தில் வைரலானது.
  • கஜோலின் டீப் பேக் வீடியோ இன்று வைரலானது.
  • பிரதமர் மோடி இன்று தனது டீப் பேக் குறித்த கவலையை பகிர்ந்துள்ளார்.
டீப் பேக் குறித்து பிரதமர் மோடி கவலை... போலி வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி? title=

How To Identify Deep Fake Videos: டீப் பேக் தொழில்நுட்பம் தற்போது தொடர்ந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. டீப் பேக் (Deep Fake) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாரும் எளிதில் கண்டுபிடிக்க இயலாத அல்லது உடனடி பார்வையில் மெய்யாகவே தோற்றமளிக்கும் போலிகளை உருவாக்க முடியும். சமீபத்தில், டீப் பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராஷ்மிகா மந்தனா தொடர்பான வீடியோ வைரலானது. தொடர்ந்து, பலரும் இதுசார்ந்த அச்சத்தை வெளிப்படுத்திய நிலையில், ராஷ்மிகாவும் தனது அச்சத்தை பதிவு செய்தார். 

ராஷ்மிகாவை தொடர்ந்து டைகர்-3 திரைப்பட ரீலிஸை முன்னிட்டு கேத்ரீனா கைஃப்வின் டீப் பேக் வீடியோவும் இணையத்தில் வலம் வந்தது. தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகை கஜோலின் டீப் பேக் வீடியோவும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. டீப் பேக் வீடியோ ஏற்படுத்தும் அச்சம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது எனலாம். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்த டீப் பேக் தொழில்நுட்பம் சமூகத்தில் ஏற்படுத்தும் அச்ச உணர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

டெல்லி பாஜக தலைமையகத்தில் ஊடகவியலாளர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது,"நான் சமீபத்தில் ஒரு கர்பா பாடலைப் பாடுவதை போன்ற ஒரு வீடியோவை பார்த்தேன். இதுபோன்ற பல வீடியோக்கள் ஆன்லைனில் உள்ளன. டீப்ஃபேக்கின் அச்சுறுத்தல் பெரும் கவலையாக மாறியுள்ளது மற்றும் நாம் அனைவருக்கும் நிறைய சிக்கல்களை உருவாக்கலாம்" என்றார். மேலும், ஊடகங்கள் இந்த தொழில்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க | இந்த பாஸ்வேர்ட்களை வைத்தால் ஆபத்து... உடனே மாற்றுங்கள் மக்களே!

டீப் பேக் தொழில்நுட்பம் நாட்டின் பாதுகாப்பில் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தத் தக்கது என்பதால் அதுகுறித்து மிகவும் விழிப்பாக இருப்பது அவசியமாகிறது. மேலும், டீப் பேக் தொழில்நுட்பம் மூலம் போலியான வீடியோக்களை உருவாக்கி, சமூக வலைதளங்களில் பரப்பினால், குற்றவாளிகளுக்கு ரூ. 3 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது ஒருபுறம் இருக்க டீப் பேக் வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம். 
- இயற்கைக்கு மாறான முகபாவனைகள், பொருந்தாத உதட்டசைவு அல்லது சீராக இல்லாத கண் சிமிட்டல் ஆகியவை அந்த வீடியோவில் இருந்தால் அவை டீப் பேக் தொழில்நுட்பத்தாலானதாக இருக்கலாம்.  

- வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் இருந்தால், அதில் பேசுபவரின் குரல் தொனி, சுருதி அல்லது இயற்கைக்கு மாறான பேச்சு முறைகளில் மாற்றங்களை கவனமாகக் கேளுங்கள். 

- வீடியோவில் காட்சிகள் சிதைவடைவது, மங்கலாக தெரிவது அல்லது சீரற்ற வெளிச்சம் இருப்பது டீப் பேக் தொழில்நுட்பத்தின் அறிகுறிகளாக காணலாம். வீடியோவில் உள்ளவர் அந்த அமைப்பில் யதார்த்தமாக இருக்கிறாரா என்பதை கவனியுங்கள். 

- வீடியோவில் உள்ள நடத்தை அல்லது விஷயங்கள் அந்த தனிநபரின் அறியப்பட்ட குணாதிசயங்களுடன் ஒத்துப்போகிறதா என்பதையும் ஒப்பிட்டு பார்க்கவும்.

- ஊடகத்தின் நம்பகத்தன்மையை அதன் மூலத்தைச் சரிபார்த்து உறுதிப்படுத்தவும். இது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்திருக்கிறாத அல்லது நம்ப இயலாத யூ-ட்யூபர் அல்லது சமூக ஊடக கணக்கு மூலம் பதிவிடப்படுகிறதா என்பதை பாருங்கள். இதுபோன்ற கணக்குகள் சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.

மேலும் படிக்க | இது டிஸ்பிளேவே இல்லாத ஸ்மார்ட்போன்... ஆடையிலேயே ஓட்டிக்கலாம்! - மிரட்டும் AI Pin சாதனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News