ரூ 151 ரீசார்ஜ் பிளான்.. ஓவரா ஆஃபரை அள்ளிக்கொட்டிய பிஎஸ்என்எல்

BSNL Increase Prepaid Plan Validaity: பிஎஸ்என்எல் அதன் பிரபலமான ரூ.151 ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியை மீண்டும் நீட்டித்துள்ளது. பிஎஸ்என்எல் பயனர்கள் இனி அதிக நாட்களுக்கு அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் இணைய வசதியை வெறும் ரூ.151க்கு பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 15, 2024, 03:31 PM IST
  • ரூ.151 திட்டம் இப்போது முழு 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.
  • பயனர்கள் முன்பு போலவே 40 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள்.
  • பயனர்கள் இலவச Zing சந்தாவையும் பெறுவார்கள்.
ரூ 151 ரீசார்ஜ் பிளான்.. ஓவரா ஆஃபரை அள்ளிக்கொட்டிய பிஎஸ்என்எல் title=

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் பயனர்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளது. தற்போது பிஎஸ்என்எல் ஐ பயன்படுத்தும் பயனாளர்கள் நாட்டில் கோடிக்கணக்கில் உள்ளனர். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இந்த நிறுவனம் மலிவான டேட்டா திட்டங்களை வழங்க்இ வருகிறது. அந்த வகையில் தற்போது பிஎஸ்என்எல் அதன் பிரபலமான ரூ.151 ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடி காலத்தை மீண்டும் நீட்டித்துள்ளது. இந்நிலையில் இனி பிஎஸ்என்எல் பயனர்கள் அதிக நாட்களுக்கு அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் இணைய வசதியை வெறும் ரூ.151க்கு பெறலாம். எனவே இந்த திட்டத்தின் செல்லுபடி காலத்தை நிறுவனம் எத்தனை நாட்களுக்கு நீட்டித்துள்ளது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

பிஎஸ்என்எல் (BSNL) வெளியிட்ட தகவலின்படி, தொற்றுநோய்களின் போது வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கான டேட்டா பூஸ்டராக இது தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 2022 இல் குறைக்கப்பட்டது. இதன் மூலம் வேலிடிட்டி 30 நாட்களில் இருந்து 28 நாட்களாக குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது பிஎஸ்என்எல் இந்த திட்டத்தின் செல்லுபடியை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் செல்லுபடி காலத்தை  நிறுவனம் 2 நாட்கள் அதிகரித்துள்ளது, இப்போது பயனர்கள் மீண்டும் முன்பு போலவே 30 நாட்களுக்கு (30 Days Validity) இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியும்.

மேலும் படிக்க | பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டதா...? பதற்றமே வேண்டாம் - ஆன்லைனில் பெற ஈஸியான வழி இதோ!

மாற்றத்திற்குப் பிறகு இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் என்னென்ன நன்மைகள் தரப்படும் என்பதைப் பார்ப்போம்:

1. 30 நாட்கள் செல்லுபடியாகும்
ரூ.151 திட்டம் இப்போது முழு 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.5,033 ஆகக் குறைக்கப்படுகிறது.

2. 40ஜிபி டேட்டா
இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் முன்பு போலவே 40 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். பயனர்கள் இணைய தேடலுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. ஜிங் சந்தா
இந்த திட்டத்தில், பயனர்கள் இலவச Zing சந்தாவையும் பெறுவார்கள்.

4. ஃப்ளெக்சிபிலிட்டி
இது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். எனவே அனைத்தையும் ஒரே நேரத்தில் அல்லது வெவ்வேறு நேரங்களில் பயன்படுத்துவதற்கான ஃப்ளெக்சிபிலிட்டி உங்களுக்கு உள்ளது. ஒவ்வொரு நாளும் வெறும் 1ஜிபி அல்லது 2ஜிபி டேட்டாவை மட்டுமே நீங்கள் பெற விரும்பவில்லை என்றால், இது உங்களுக்கான சிறந்த ரீசார்ஜ் திட்டமாகும்.

இருப்பினும் இந்த மாற்றங்கள் அனைத்து வட்டங்களிலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றங்கள் தற்போது தமிழ்நாடு வட்டத்தின் பயனர்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ 151 திட்டத்தை எப்படி எங்கு ரீசார்ஜ் செய்வது:
பிஎஸ்என்எல் இன் இந்த ரூ 151 திட்டத்தை நீங்கள் https://www.bsnl.co.in/ இல் பெற முடியும். மேலும் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் Google Pay, PhonePe, paytm உள்ளிட்ட மூன்றாம் தரப்பு மொபைல் ரீசார்ஜ் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.

இதற்கிடையில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட போட்டிப்போட்டுக் கொண்டு BSNL குறைந்த விலை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க | தொடங்கியது அமேசான் திருவிழா... தள்ளுபடியில் கிடைக்கும் 'தெறி' ஸ்மார்ட்போன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News