ஒரே பிளான் வருஷம் முழுக்க ஜாலி; மிரட்டும் BSNL பிளான்!

BSNL இன் ரூ.1498 மற்றும் ரூ.1499 திட்டங்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2021, 01:05 PM IST
ஒரே பிளான் வருஷம் முழுக்க ஜாலி; மிரட்டும் BSNL பிளான்! title=

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் மலிவான ரீசார்ஜ் திட்டங்களால் தொலைத்தொடர்பு சந்தையில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. நிறுவனம் ஒரு வருட காலத்திற்கு பல சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. 

அதன்படி புதிய ப்ரீபெய்ட் திட்டத்தைப் (Prepaid Plans) பற்றிய தகவல்களை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்தத் தகவல் உங்களுக்கு நிச்சயமாக உதவியாக இருக்கும். அதன்படி BSNL இன் இந்த அற்புதமான இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை பற்றி தான் இங்கு நாம் காண உள்ளோம். இந்த இரண்டு திட்டங்களுக்கு வெறும் ரூ.,1 தான் வித்தியாசம் ஆகும்.

ALSO READ | Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள்

RS 1499 BSNL திட்டம்
BSNL இன் இந்த திட்டத்தின் விலை ரூ 1499 மற்றும் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்கள் மொத்தம் 24 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். மேலும் இந்த திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். BSNL ரீசார்ஜ் திட்டத்தில் இலவச அன்லிமிடெட் காலிங் நன்மையும் கிடைக்கிறது.

RS 1498 BSNL திட்டம்
இந்த ரீசார்ஜ் பற்றி பேசுகையில், இது ரூ 1498 க்கு வருகிறது மற்றும் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். இது ஒரு டேட்டா வவுச்சர் பேக் (BSNL data voucher) ஆகும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தவிர, அன்லிமிடெட் காலிங்கும் இதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ALSO READ: இந்த திட்டத்தில் ஜியோ-ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News