Vivo Y11: ரூ. 10,000-க்குள் இப்படி ஒரு அசத்தல் போனா? விவோ அறிமுகம் செய்த அதிசயம்!!

Vivo Y11: பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் இந்த போன் பல அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 3, 2023, 12:37 PM IST
  • Vivo Y11, 1,600 x 720 பிக்சல் ரெசல்யூஷனுடன் 6.51 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
  • மேல் பக்கத்தில் வாட்டர்டிராப் நாட்ச் மற்றும் கீழே ஒரு தடிமனான சின் அமைப்பு உள்ளது.
  • ஆனால் இந்த போனில் கைரேகை ஸ்கேனர் (ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்) இல்லை.
Vivo Y11: ரூ. 10,000-க்குள் இப்படி ஒரு அசத்தல் போனா? விவோ அறிமுகம் செய்த அதிசயம்!! title=

பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ நிறுவனம், விவோ ஒய்-சீரிஸ் போனை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது விவோ ஒய்11 (Vivo Y11) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் இந்த போன் பல அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. இந்த போனில் பெரிய திரை, வலுவான பேட்டரி மற்றும் பேங் கேமரா ஆகியவை உள்ளன. இதன் வடிவமைப்பைப் பார்த்து கண்டிப்பாக பயனர்கள் மகிழ்ச்சியடைவார்கள். Vivo Y11 இன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Vivo Y11: விவரக்குறிப்புகள்

Vivo Y11 ஆனது 1,600 x 720 பிக்சல் ரெசல்யூஷனுடன் 6.51 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேல் பக்கத்தில் வாட்டர்டிராப் நாட்ச் மற்றும் கீழே ஒரு தடிமனான சின் அமைப்பு உள்ளது. ஆனால் இந்த போனில் கைரேகை ஸ்கேனர் (ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்) இல்லை. தொலைபேசியில் ஒரு ரெக்டாங்குலர் ஐலேண்டுடன் ஒரு சர்குலர் கேமரா மாட்யூலும் உள்ளது. 

Vivo Y11: கேமரா

Vivo Y11 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 8எம்பி பின்புற கேமரா உள்ளது. மேலும் இதனுடன் எல்இடி ஃப்ளாஷ் லைட் கிடைக்கிறது. முன்பக்கத்தில் 5எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. விவோ ஒய்11 ஸ்மார்ட்போனில் MediaTek Helio P35 செயலி உள்ளது. இது 2ஜிபி விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பத்துடன் 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கூகுள் எடுத்த அதிரடி முடிவு - செலவை குறைக்க தின்பண்டங்கள் நிறுத்தம்: ஊழியர்கள் வேதனை

Vivo Y11

Vivo Y11: பேட்டரி

ஸ்மார்ட்போனில் 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி உள்ளது. மென்பொருளைப் பற்றி பேசுகையில், இந்த சாதனம் Android 12 ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS இல் இயங்குகிறது. விவோ ஒய்11 போனில் உள்ள கனெக்டிவிட்டி விருப்பங்களில் 4ஜி, வைஃபை, புளூதூத் 5.0, MicroUSB போர்ட், ஜிபிஎஸ் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும்.

Vivo Y11: இந்தியாவில் இதன் விலை என்ன?

Vivo Y11 4ஜிபி ரேம் மாறுபாட்டின் விலை RMB 899 (சுமார் ரூ. 10,000) ஆகும். அதே சமயம் 6ஜிபி வகையின் விலை RMB 999 (சுமார் ரூ. 12,000) ஆகும். இது அப்சிடியன் பிளாக் மற்றும் ஐஸ் ப்ளூ வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனையில் உள்ளது.

மேலும் படிக்க | ரூ.7 ரீசார்ஜ் திட்டம்...தினமும் 3 ஜிபி டேட்டா..அசர வைக்கும் BSNL

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News