அமேசான் பிரைம் பயனர்களுக்கு நல்ல செய்தி... சந்தா அதிரடி குறைப்பு!

Amazon Prime Lite: அமேசான் நிறுவனம் 999 ரூபாய்க்கு வழங்கி வந்த அதன் பிரைம் லைட் சந்தா விலையை தற்போது குறைத்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Dec 22, 2023, 06:58 PM IST
  • அமேசான் பிரைம் பல்வேறு திட்டங்களை இந்தியாவில் வழங்கி வருகிறது.
  • அதில் லைட் சந்தாவையும் பலரும் பயன்படுத்துகின்றனர்.
  • அமேசான் லைட்டின் பலன்களிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
அமேசான் பிரைம் பயனர்களுக்கு நல்ல செய்தி... சந்தா அதிரடி குறைப்பு!  title=

Amazon Prime Lite: அமேசான் நிறுவனம் அதன் லைட் உறுப்பினர்களுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. அதாவது அதன் அமேசான் பிரைம் லைட் சந்தா குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமேசான் பிரைம் லைட் இந்தியாவில் 999 ரூபாயில் வழங்கப்பட்டது. தற்போது இதில் 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அமேசான் பிரைம் லைட் இனி 799 ரூபாய்க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.  

அமேசான் இந்தியா நிறுவனம் அதன் பிரைம் லைட் உறுப்பினர் திட்டத்தின் விலையைக் குறைப்பதுடன், அமேசான் பிரைம் லைட் சந்தா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பலன்களிலுமே சில மாற்றங்களைச் செய்துள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அமேசான் பிரைம் லைட் உறுப்பினர் இப்போது ஒரு நாள் டெலிவரி, இரண்டு நாள் டெலிவரி, திட்டமிடப்பட்ட டெலிவரி மற்றும் ஒரே நாள் டெலிவரி உள்ளிட்ட ஆப்ஷன்களை பெறுகின்றனர். இது நோ-காஸ்ட் மாதத்தவணை, ஆறு மாதங்களுக்கு இலவச திரை மாற்று, பிரத்யேக விற்பனைக்கான முன்கூட்டிய அணுகல் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.

மேலும் படிக்க | கிறிஸ்துமஸில் பிடிச்சவங்களுக்கு மொபைல் கிப்ட் பண்ணுங்க... இருக்குது முரட்டு தள்ளுபடி!

இந்த புதுப்பிக்கப்பட்ட திட்டமானது, தகுதியான முகவரிகளுக்கு அவசரமில்லாமல் ஷிப்பிங் செய்வதோடு 25 ரூபாய் கேஷ்பேக் மற்றும் தகுதியான முகவரிகளுக்கு ஒரு பொருளுக்கு 175 ரூபாய்க்கு காலை டெலிவரியும் வழங்குகிறது. இது தவிர, புதுப்பிக்கப்பட்ட அமேசான் பிரைம் லைட் உறுப்பினர் இப்போது இரண்டு சாதனங்களுக்கு மாறாக ஒரு சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த இயலும்.

இருப்பினும், பிரைம் வீடியோ தரம் HD தரத்திற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரைம் மெம்பர்ஷிப்பில் அமேசான் பிரைம் மியூசிக் மற்றும் பிரைம் ரீடிங்கிற்கான அணுகல் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவை Standard அமேசான் பிரைம் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சேவைகள்.

அமேசான் பிரைம் திட்டங்கள்

மொத்தத்தில், அமேசான் இந்தியாவில் நான்கு பிரைம் உறுப்பினர் சந்தா திட்டங்களை வழங்குகிறது. மாதாந்திர பிரைம் சந்தா திட்டத்தின் விலை 299 ரூபாய், காலாண்டு பிரைம் மெம்பர்ஷிப் சந்தா திட்டம் மூன்று மாதங்களுக்கு 599 ரூபாய், வருடாந்திர பிரைம் மெம்பர்ஷிப் திட்டம் 12 மாதங்களுக்கு 1,499 ரூபாய் உள்ளிட்டவை உள்ளது. இப்போது 799 ரூபாய் விலையில் கிடைக்கும் அமேசான் பிரைம் லைட் உறுப்பினர் திட்டம்.

கிடைக்கும் நன்மைகள்

அமேசான் பிரைம் உறுப்பினர் ஒரு நாள் டெலிவரி, இரண்டு நாள் டெலிவரி, திட்டமிடப்பட்ட டெலிவரி மற்றும் ஒரே நாள் டெலிவரி ஆப்ஷன்களை வழங்குகிறது. அதோடு, பிரைம் ரீடிங், அமேசான் மியூசிக்கிற்கான வரம்பற்ற அணுகல், அமேசான் பிரைம் வீடியோவிற்கான வரம்பற்ற அணுகல், பிரத்யேக ஒப்பந்தங்களுக்கான ஆரம்ப அணுகல், கட்டணமில்லா மாதத் தவணை, ஆறு மாத இலவச திரை மாற்று, பிரைம் கேமிங்கிற்கான அணுகல் போன்ற பலன்களை வழங்குகிறது. 

Amazon Family சலுகைகள், இந்தத் திட்டம் தகுதியான முகவரிகளுக்கு அவசரமில்லாமல் ஷிப்பிங் செய்வதோடு ரூ. 25 கேஷ்பேக் மற்றும் தகுதியான முகவரிகளுக்கு ஒரு பொருளுக்கு ரூ. 50 என காலை டெலிவரி வழங்குகிறது, இது லைட் உறுப்பினர் திட்டத்தை விட மிகக் குறைவு.

மேலும் படிக்க | ஏர்டெல் நிறுவனத்தின் பெஸ்ட் ஓடிடி பிளான்... தினமும் 3ஜிபி டேட்டா - விலை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News