e-vehicles: மின்சார வாகனம் வாங்கினால் 3 லட்ச ரூபாய் மானியம்! அதிரடி சலுகை தரும் மாநிலம்!

மின் வாகனங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக Electric Mobility Promotion Policy -21  அறிமுகம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2021, 07:10 AM IST
  • மின் வாகனங்களின் பயன்பாட்டை மேம்படுத்த சலுகை
  • 3 லட்சம் ரூபாய் வரை மானியம்
  • 5 ஆண்டுகளுக்கு டோல் டாக்ஸ் இல்லை
e-vehicles: மின்சார வாகனம் வாங்கினால் 3 லட்ச ரூபாய் மானியம்!  அதிரடி சலுகை தரும் மாநிலம்! title=

புது தில்லி: மின்சார இயக்கம் ஊக்குவிப்புக் கொள்கை: - நீங்களும் கார் வாங்க விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 3 லட்சம் வரை கார் வாங்குவதற்கு அரசு மானியம் வழங்குகிறது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவா அரசாங்கம் EV களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக Electricity Mobility Promotion Policy 2021ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சனிக்கிழமை (5) மின்சார இயக்கத்தை மேம்படுத்துவதற்காக தொழில்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இதன் முக்கிய நோக்கம், பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும், மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதும் ஆகும்” என்று முதல்வர் சாவந்த் கூறினார்.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க கோவா அரசின் புதிய கொள்கையின்படி, கார்கள் வாங்குவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கும் திட்டத்தை, மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த்தொடங்கி வைத்தார்.

இந்த சலுகையானது முதலில் வரும் 400 வாகனங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கிடைக்கும்.

READ ALSO | Maruti Suzuki கார்களின் விலைகள் அதிகரிக்கின்றன 

இ-வாகனங்கள் வாங்குபவர்களுக்கு சலுகை

உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில்,  கோவாவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வகை இ-வாகனங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து (toll tax) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மின் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மாநில அரசு மானியம் வழங்குகிறது மற்றும் மாநிலத்தில் சார்ஜிங் உள்கட்டமைப்பை ஏற்படுத்துகிறது. நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 25 கி.மீட்டருக்கும் ஒரு சார்ஜிங் பாயின்ட் இருக்கும் என்று முதல்வர் சாவந்த் கூறினார். நகரத்தில் உள்ள சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை, நெடுஞ்சாலைகளில் இருப்பதை விட குறைவாக உள்ளன என்பதையும் சாவந்த் சுட்டிக்காட்டினார். 

மாநில அரசு மானியம் வழங்கும்

இரு சக்கர வாகனங்களுக்கு 30 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 40 சதவீதமும். நான்கு சக்கர வாகனங்களுக்கு 3 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சுமார் 400 வாகனங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் சாவந்த் கூறினார். இந்தக் கொள்கையானது மாநிலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ | மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News