Cheapest Electric Scooters: மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் மிகச்சிறந்த மின்சார ஸ்கூட்டர்கள்

சந்தையில் மின்சார வாகனங்களின் விலை சற்று அதிகமாக உள்ளது என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், மலிவான மின்சார வாகனங்களும் சந்தையில் கிடைக்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2021, 08:09 PM IST
Cheapest Electric Scooters: மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் மிகச்சிறந்த மின்சார ஸ்கூட்டர்கள் title=

Cheapest Electric scooter under Rs 50,000: பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் கவனம் மின்சார வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளது. வரவிருக்கும் காலம் மின்சார வாகனங்களுக்கானது. இந்தியாவிலும் அதிக வாடிக்கையாளர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சந்தையில் மின்சார வாகனங்களின் விலை சற்று அதிகமாக உள்ளது என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், மலிவான மின்சார வாகனங்களும் சந்தையில் கிடைக்கின்றன. அதிக பட்ஜட் முதல் குறைந்த பட்ஜட் வரை, அனைத்து விலை வரம்புகளிலும் மின்சார வாகனங்களை வாங்கலாம். 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் கிடைக்கும் மலிவான மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1. கோமகி XGT KM

மின்சார வாகன தயாரிப்பாளர் கோமகியின் ஸ்கோர் கோமகி XGT KM (Komaki) வாகனமும் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதன் விலை சுமார் 45 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த வாகனம் முழு சார்ஜில் 80 கிமீ வரை பயணிக்கிறது. 

2. ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் எல்எக்ஸ்

ஹீரோ எலக்ட்ரிக்கின் ஸ்கூட்டரான ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் எல்எக்ஸ் (Hero Electric flash LX) சுமார் 50 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்கூட்டராகும். நீங்கள் இதை ரூ. 46,640 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம். முழு சார்ஜில், இது 50 கிமீ தூரம் வரையிலான பயணத்தை நிறைவு செய்கிறது. 

ALSO READ: Greta: அட்டகாசமான அம்சங்களுடன் அசத்தல் விலையில் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்

3. ஆம்பியர் ரியோ பிளஸ்

குறைந்த பட்ஜெட் மின்சார ஸ்கூட்டரில் ஆம்பியர் REO பிளஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது முழு சார்ஜில் 65 கிமீ வரை பயணிக்கும். இதன் விலை ரூ .44,990 ஆகும். 

4. எவோலெட் போனி

எவோலட்டின் மின்சார ஸ்கூட்டர் (Electric Scooter) Evolet pony உங்கள் பட்ஜெட்டுக்குள் பொருந்தி இருக்கும். இந்த ஸ்கூட்டர், முழு சார்ஜில் 90 முதல் 120 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும். இதன் ஆரம்ப விலை ரூ .39,500 ஆகும். 

5. ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா எல்எக்ஸ்

ஹீரோ (Hero) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆப்டிமா எல்எக்ஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் ஆரம்ப விலை ரூ 51,440 ஆகும். முழு சார்ஜில் 50 கிமீ வரையிலான பயணத்தை இது நிறைவு செய்கிறது. 

ALSO READ: அறிமுகம் ஆகிறது OPPO-வின் மிக மலிவான மின்சார ஸ்கூட்டர்: கசிந்த விவரங்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News