e-Sprinto Electric Scooter In India: எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன பிராண்டான இ-ஸ்பிரிண்டோ (e-Sprinto) நிறுவனம் செவ்வாயன்று (நவம்பர் 22) அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராபோ (Rapo) மற்றும் ரோமி (Roamy) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், இ-ஸ்பிரிண்டோ (e-Sprinto) நிறுவத்தின் தயாரிப்பு வரிசையில் இப்போது 6 மாடல்கள் என மொத்தம் 18 வகைகளில் இரு சக்கர வாகன உள்ளன. இது நிலையான மற்றும் அணுகக்கூடிய இயக்கம் தீர்வுகளை வழங்குவதில் பிராண்டின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
ரோமி - ராபோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை விவரம்
இந்தியாவை பொறுத்த வரை ரோமி மற்றும் ராபோ என இரண்டு இரு சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை முறையே ரூ.54,999 மற்றும் ரூ.62,999 என்ற மலிவான ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற பயணிகள் உட்பட பலதரப்பட்ட மக்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
-- ரோமியின் ஆரம்ப விலை ரூ.54,999
-- ராபோவின் ஆரம்ப விலை ரூ.62,999
இ-ஸ்பிரிண்டோ ராபோ (e-Sprinto Rapo) அம்சங்கள்
நீளம் 1840, அகலம் 720 மற்றும் உயரம் 1150 மிமீ பரிமாணங்களுடன், ராபோ 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்குகிறது. கையடக்க ஆட்டோ கட்ஆஃப் சார்ஜர் கொண்ட லித்தியம்/லீட் பேட்டரி IP65 நீர்ப்புகா மதிப்பீட்டில் 250W BLDC ஹப் மோட்டாரை இயக்குகிறது. ராபோவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர் மற்றும் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் மைலேஜ் வரை செல்லும். முன் டிஸ்க் பிரேக் 12 இன்ச் ரிம் மற்றும் ரியர் டிரம் பிரேக் 10 இன்ச் மோட்டார் பாதுகாப்பை உறுதி செய்கிறது, மேலும் இது 150 கிலோ ஏற்றும் திறன் கொண்டது.
இ-ஸ்பிரிண்டோ ராபோ வண்ணங்கள்
ராபோ இரு சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிவப்பு, நீலம், சாம்பல், கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது.
மேலும் படிக்க - Innova சிறப்பு எடிஷன் அறிமுகம்... 8 பேர் வரை அமரலாம் - என்னென்ன ஸ்பெஷல் பாருங்க!
இ-ஸ்பிரிண்டோ ரோமி (e-Sprinto Roamy) அம்சங்கள்
நீளம் 1800, அகலம் 710 மற்றும் உயரம் 1120 மிமீ, ரோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் ராபோ போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் போர்ட்டபிள் ஆட்டோ கட் ஆஃப் சார்ஜருடன் லித்தியம்/லீட் பேட்டரியைக் கொண்டுள்ளது. IP65 நீர்ப்புகா மதிப்பீட்டில் 250W BLDC ஹப் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். ரோமியின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும், முழு சார்ஜில் 100 கிமீ மைலேஜ் கிடைக்கும். முன்பக்க டிஸ்க் பிரேக்கும், 150 கிலோ ஏற்றும் திறன் கொண்டது. வலுவான மற்றும் மாறுபட்ட பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.
இரண்டு மாடல்களும் ரிமோட் லாக்/அன்லாக், ரிமோட் ஸ்டார்ட், இன்ஜின் கில் ஸ்விட்ச்/சைல்ட் லாக்/பார்க்கிங் மோட் மற்றும் USB அடிப்படையிலான மொபைல் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் வருகின்றன. டிஜிட்டல் கலர் டிஸ்ப்ளே, பேட்டரி நிலை, மோட்டார் செயலிழப்பு, த்ரோட்டில் செயலிழப்பு மற்றும் கட்டுப்படுத்தும் செயலிழப்பு போன்ற விழிப்பூட்டும் அம்சங்களையும் கொண்டுள்ளது.
இ-ஸ்பிரிண்டோ ரோமி வண்ணங்கள்
ரோமி இரு சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிவப்பு, நீலம், சாம்பல், கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வருகிறது.
வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி சஐவது தான் இலக்கு -இ-ஸ்பிரிண்டோ
இ-ஸ்பிரிண்டோவின் இயக்குநரான அதுல் குப்தா பேசுகையில், தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். மேலும் எங்கள் புதிய மின்சார ஸ்கூட்டர்களான ராபோ மற்றும் ரோமியை நேரில் பார்ப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது பயணத்தை யதார்த்தமாக மாற்ற இரவும் பகலும் உழைத்த எங்கள் அசாதாரண குழுவின் அயராத அர்ப்பணிப்பின் உச்சம் தன இந்த சாதனை. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளை உருவாக்குவதில் இ-ஸ்பிரிண்டோ நிறுவனம் இருக்கும். அதற்கு உதாரணமாக தான் ராபோ மற்றும் ரோமி எடுத்துக்காட்டாக உள்ளது என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ