ராயல் என்ஃபீல்ட் உடன் மோத வருகிறது ஹோண்டா... CB350 பைக் புதிய மாடலின் மிரட்டும் டீஸர்!

Honda CB350 New Model: ஹோண்டா நிறுவனம் அதன் CB350 பைக்கின் புதிய மாடலின் வடிவமைப்பையும், அதன் பெயரையும் டீஸர் வீடியோ மூலம் அறிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 18, 2023, 09:35 AM IST
  • ஆனால், புதிய மாடலின் விலை குறித்து வெளியிடவில்லை.
  • புதிய மாடலின் சிறப்பம்சங்களையும் இதில் குறிப்பிடவில்லை.
  • இந்த மாடல் ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 உடன் போட்டியிடும் என எதிர்பார்ப்பு.
ராயல் என்ஃபீல்ட் உடன் மோத வருகிறது ஹோண்டா... CB350 பைக் புதிய மாடலின் மிரட்டும் டீஸர்! title=

Honda CB350 New Model: ஹோண்டா CB350 பைக் என்பது அந்த நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பாகும். தற்போது CB350 பைக்கின் புதிய மாடலை அறிமுகம் செய்ய ஹோண்டா மோட்டார் (Honda Motor) தயாராகி வருகிறது. குறிப்பாக, ஹோண்டா நிறுவனம் அந்த புதிய மாடல் சார்ந்த டீசர் வீடியோவையும் வெளியிட்டு அதன் அதிகாரப்பூர்வ பெயரையும் அறிவித்துள்ளது.

புல்லட் உடன் போட்டியிடும்

ஆனால் இந்த டீசர் வீடியோவில் புதிய மாடலின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. அதன் பெரும்பாலான அம்சங்கள் CB350 பைக்கின் அடிப்படையில்தான் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது இந்திய சந்தையில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக்குடன், ஹோண்டாவின் இந்த புதிய மாடல் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள இந்த டீஸர் வீடியோவை பார்க்கும்போது, புதிய ஹோண்டா CB350 மாடலுக்கு 'BABT' எனப் பெயரிடப்படும் எனத் தெரியவந்துள்ளது. இந்த மாடல் CB350 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் H'ness CB350 மற்றும் CB350RS போன்ற மாடல்கள் ஏற்கெனவே கிடைக்கின்றன.

ஹோண்டா வெளியிட்ட டீசர் வீடியோ

மேலும் படிக்க | புல்லட் பைக்கில் ரொம்ப தூரம் பயணம் செய்ய ஆசையா... வருகிறது புதிய முரட்டு பைக் - முழு விவரம் இதோ!

எதிர்பார்ப்புகள் என்னென்ன?

ஹோண்டா CB350 புதிய மாடலின் வடிவமைப்பை அந்த டீஸர் வீடியோ வெளிப்படுத்தி உள்ளது. பைக் பழைய கால லுக்கை பெற்றிருப்பது டீஸர் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இருக்கை தனித் தனியாக (Split Seats) வடிவமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்கில் க்ரிப் டிசைன் உள்ளது. இது தவிர பைக்கில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளில் மெட்டல் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஃபெண்டரின் வடிவமைப்பு ராயல் என்ஃபீல்டு கிளாசிக் போன்று உள்ளதாக கூறப்படுகிறது. இதில் கருப்பு தீம் கொடுக்கப்பட்டு பல டீசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஹோண்டா தனது வரவிருக்கும் புதிய மாடலில் 348.36சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 20.78bhp பவரையும், 30Nm டார்க்கையும் உருவாக்கும். இதில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பைக்கில் Dual Shock Absorbers மற்றும் டிஸ்க் பிரேக்குகள் கிடைக்கும்.

விலை எதிர்பார்ப்பு...

ஹோண்டாவின் டீசர் வீடியோவை பார்க்கும் போது, ஹோண்டா CB350 பைக்கின் புதிய மாடல் விரைவில் சந்தைக்கு வந்துவிடும் எனலாம். கூடிய சீக்கிரம் முன்பதிவு தேதி மற்றும் அறிமுக தேதியும் அந்நிறுவனத்தால் அறிவிக்கப்படலாம். இந்த பைக்கின் விலை சுமார் 3.5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என ஊகிக்கப்படுகிறது.

ஹோண்டா CB300R

ஹோண்டா மோட்டார் நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் ஹோண்டா CB300R பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப் ஆகியவை கிடைக்கின்றன. இதில் 220மிமீ டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பைக்கில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இது தவிர, பைக்கில் 286சிசி எஞ்சின் 31hp பவரையும், 27.5Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த பைக்கின் விலை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 

மேலும் படிக்க | பல்சர் காதலர்களே ரெடியா... விரைவில் NS400 - விலை, ரிலீஸ் தேதி, சிறப்பம்சங்கள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News