தப்பித்தவறி கூட இந்த Link ஐ கிளிக் பண்ணிடாதீங்க! இல்லையெனில்..!

வாட்ஸ்அப் நிறத்தை பிங்க் நிறமாக மாற்றுவதாகக் கூறும் Link உடன் ஒரு போலியான மெசேஜ் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 19, 2021, 05:01 PM IST
தப்பித்தவறி கூட இந்த Link ஐ கிளிக் பண்ணிடாதீங்க! இல்லையெனில்..! title=

வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்றாகும். பயனர்களின் சேட் அனுபவத்தை மேம்படுத்த, நிறுவனம் புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வபோது இந்த செயலியில் பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதனால், பயனர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்வதோடு பல கேளிக்கை அம்சங்களையும் பெறுகிறார்கள். 

அந்தவகையில் வாட்ஸ்அப் (Whatsapp) நிறத்தை பிங்க் நிறமாக மாற்றுவதாகக் கூறும் Link உடன் ஒரு போலியான மெசேஜ் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. அது உண்மையிலேயே போலியான மெசேஜ் மட்டுமல்ல, அது ஒரு போலியான வைரஸும் (Virus) ஆகும். அதை தப்பித்தவறிகூட கிளிக் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. 

ALSO READ | பல புதிய அம்சங்களுடன் விரைவில் புதுப்பொலிவுடன் வரவுள்ளது Whatsapp: விவரம் உள்ளே

எனவே இந்த Link ஐ நீங்கள் கிளிக் செய்தால் சைபர் கிரிமினல்கள் உங்கள் தொலைபேசியை ஹேக் செய்யக்கூடும். அதுமட்டுமில்லாது, உங்கள் வாட்ஸ்அப் கணக்கை நீங்களே பயன்படுத்த முடியாமலும் போகலாம். இது குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர் ராஜ்ஷேகர் ராஜஹாரியா ட்விட்டர் தளத்தில் ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், 

 

 

 

வாட்ஸ்அப் Pink ஜாக்கிரதை!! ஒரு APK பதிவிறக்க இணைப்புடன் வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு வைரஸ் பரவுகிறது. #WhatsappPink என்ற பெயருடன் வரும் எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். அப்படி கிளிக் செய்தால் உங்கள் தொலைபேசியின் முழுமையான அணுகலையும் நீங்கள் இழக்கப்படும். இந்த முக்கிய செய்தியை அனைவருடனும் பகிரவும்” என்று இதில் கூறியுள்ளார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News