WhatsApp Latest Features: வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்றாகும். பயனர்களின் சேட் அனுபவத்தை மேம்படுத்த, நிறுவனம் புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வபோது இந்த செயலியில் பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதனால், பயனர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்வதோடு பல கேளிக்கை அம்சங்களையும் பெறுகிறார்கள். செயலியை மேலும் சிறப்பாக்க, நிறுவனம் நீண்ட காலமாக சில புதிய அம்சங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவை இப்போது வாட்ஸ்அப்பில் தொடங்கப்பட உள்ளன. உங்கள் WhatsApp செயலியில் விரைவில் புதுப்பிக்கப்படவிருக்கும் அந்த சிறப்பு அம்சங்களைப் பற்றி இங்கே காணலாம்.
Instagram Reels
வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் ரீல்சை (Instagram Reels) மிக விரைவில் சேர்க்கப்போகிறது. தகவல்களின்படி, குறுகிய வீடியோ கிளிப்புகள் உங்கள் சேட் செயலியில் ஒருங்கிணைக்கப்படும். இருப்பினும், அவற்றை பயனர்கள் காணும் விதம் பற்றி இன்னும் எந்த தெளிவான தகவலுமில்லை. ஆனால் சேட்டிங்கின் மேலே, ஸ்டேட்டஸின் அருகில், Instagram Reels-ன் ஒரு பிரிவு சேர்க்கப்படும் என ஊகிக்கப்படுகிறது.
Read later option
தகவல்களின்படி, இப்போது நீங்கள் எந்த செய்தியையும் டெலீட் செய்யத் தேவையில்லை. ஆர்கைவ் பயன்முறையில் தேவையற்ற செய்திகளை உள்ளிடலாம். அதாவது, இப்படி செய்த பின்னர், இந்த செய்திகள் உங்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யாது. உங்கள் ஓய்வு நேரத்தில் இந்த செய்திகளை மெதுவாகப் படிக்கலாம். இந்த அம்சமும் இந்த ஆண்டு தொடங்கப்படலாம்.
ALSO READ: பழைய மற்றும் அழித்த WhatsApp செய்திகளை மீண்டும் கொண்டுவர Tips and Tricks
Whatsapp Logout
முதல் முறையாக பயனர்களுக்கு WhatsApp-பிலிருந்து பிரேக் கிடைக்கும். வாட்ஸ்அப்பில் வரும் செய்தியால் நீங்கள் நிம்மதி இழந்தால், இனி அது குறித்து கவலைப் பட அவசியமில்லை. வாட்ஸ்அப் முதல் முறையாக Logout செய்யும் அம்சத்தையும் கொண்டு வரவுள்ளது. அதாவது, இனி உங்கள் விருப்பம் போல, WhatsApp-பிலிருந்து பிரேக் எடுக்கலாம்.
சமீபத்தில், வாட்ஸ்அப்பில் புதிய ஆடியோ செய்தி அம்சம் வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அம்சத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஆடியோவின் வேகத்தையும் நீங்களே தீர்மானிக்கலாம். முந்தைய வாட்ஸ்அப் ஒரு ஆடியோ ஸ்பீட் ஃபார்மேட்டை மட்டுமே ஆதரிக்கப் பயன்படுகிறது.
சமீபத்திய காலங்களில், வாட்ஸ்அப்-ஐ ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் மிக எளிதாக அணுக முடியும் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு, பல சாதன (Multi Device) ஆதரவு கிடைக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. அதாவது, நீங்கள் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் வாட்ஸ்அப்பை இயக்க முடியும்.
எங்கள் இணை வலைத்தளமான bgr.in இன் படி, செய்தியைப் போலவே புகைப்படங்களும் விரைவில் மறையும் அம்சம் தற்போது வரப்போகிறது. இந்த சிறப்பு அம்சத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தியில் உள்ள புகைப்படங்களும் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ALSO READ: WhatsApp செய்திகளின் மூலத்தை கண்டறியும் புதிய முறை பற்றி தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR