லேப்டாப்பில் அதிக தூசியா? சுத்தம் செய்யும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!

Laptop Cleaning: லேப்டாப் அலுக்காக இருக்கிறது என்று நீங்கள் சுத்தம் செய்ய நினைக்கும் போது, இந்த தவறை செய்தால் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்க வேண்டியிருக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Feb 12, 2024, 07:09 AM IST
  • லேப்டாப் தினசரி தேவைகளுக்கு பயன்படுகிறது.
  • அதிக தூசி சேர்வதற்கு வாய்ப்புள்ளது.
  • அடிக்கடி சுத்தப்படுத்துவது நல்லது.
லேப்டாப்பில் அதிக தூசியா? சுத்தம் செய்யும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!  title=

Laptop Cleaning: லேப்டாப்பின் தேவை இன்றைய உலகில் முக்கியமானதாக உள்ளது. படம் பார்ப்பது தொடங்கி, வேலை பார்ப்பது வரை நிறைய தேவைகளுக்கு லேப்டாப் உதவுகிறது. லேப்டாப்பில் தூசி அல்லது அழுக்கு சேராமல் பார்த்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் அதன் ஆயுள் குறைந்துவிடும். உங்கள் கார் அல்லது பைக்கை போலவே, உங்கள் லேப்டாப்பை தவறாமல் சுத்தம் செய்வது நல்லது, அதைச் செய்வது அவ்வளவு கடினம் அல்ல. இதற்கு தேவையான பொருட்களை வாங்கி, எப்போதும் வீட்டில் வைத்திருங்கள்.  உங்கள் லேப்டாப்பில் அதிக தூசி சேர்ந்தால், பல வகையான சிக்கல்கள் ஏற்பட தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் லேப்டாப்பை சரி செய்ய ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்க நேரிடும். 

மேலும் படிக்க | 11 ஆயிரத்துக்குள் இப்படியொரு 5ஜி போன்.. 50MP கேமரா, டால்பி ஸ்பீக்கர்..!

இந்த பிரச்சனைகளை நீங்கள் தவிர்க்க விரும்பினால், லேப்டாப்பை கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். லேப்டாப் அதிக செலவு வைக்காமல் இருக்க சில டிப்ஸ் இதோ.  அடிக்கடி லேப்டாப்பை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இது லேப்டாப்பின் ஆயுளை நீண்ட காலம் வரும்படி அதன் செயல்திறனை மேம்படுத்தும். மடிக்கணினியை சுத்தம் செய்ய, உங்களுக்கு சில பொருட்கள் தேவைப்படும். எப்போது லேப்டாப்பை துடைக்க மைக்ரோஃபைபர் துணி அல்லது பருத்தி துணி கொண்டு துடைக்கவும்.  எலெக்ட்ரானிக் பொருட்களை சுத்தம் செய்யும் லிக்விட்டை வாங்கி, சுத்தம் செய்ய அதனை மட்டும் பயன்படுத்துவது நல்லது. சோப்பு மற்றும் தண்ணீரை ஒருபோதும் பயன்படுத்த கூடாது. 

அதே போல லேப்டாப்பின் கீபோர்டை சுத்தம் செய்வது அவசியம். அப்படி இல்லை என்றால், தூசி சேர்ந்து ஒவ்வொரு பட்டனாக ஒர்க் ஆகாமல் போகிவிடும். கீபோர்ட் கிளீனர் என்று தனியாக ஒரு லீகுவிட் உள்ளது, அதனை வைத்து சுத்தம் செய்வது நல்லது. பட்டனுக்கு கீழே உள்ள தூசிகளை மிஷினை வைத்து சுத்தப்படுத்தலாம்.  அதே போல், ஸ்கிரீன் கிளீனரைப் பயன்படுத்தி லேப்டாப்பின் திரையை சுத்தம் செய்யவும். இதற்கு நன்கு சுத்தமான துணியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  உங்களுக்கு லேப்டாப் பற்றி நன்றாக தெரிந்தால் அதன் உட்புறத்தை சுத்தம் செய்யுங்கள், அப்படி இல்லை என்றால் உட்புறத்தை சுத்தம் செய்ய விரும்பினால், லேப்டாப் சர்வீஸ் சென்டருக்கு எடுத்து செல்வது நல்லது.

லேப்டாப்பை சுத்தம் செய்ய தொடங்கும் முன்பு, சார்ஜரில் கனெக்ட் ஆகி இருந்தால் எடுத்து விடுங்கள். அதே போல பேட்டரியை கழட்ட முடிந்தால் தனியாக கழட்டி வைப்பது நல்லது.  நாம் தினசரி அடிப்படையில் லேப்டாப்பை பயன்படுத்தி வருகிறோம். லேப்டாப்பில் வேலை செய்யும் போது அதே இடத்தில் வைத்து சாப்பாடு, ஸ்னாக்ஸ் அல்லது ஜூஸ் குடிக்கிறோம். இந்த சமயத்தில் லேப்டாப்பின் ஸ்கிரீன், கீபோர்ட் போன்ற இடங்களில் உணவு பொருட்களின் துகள்கள் சிக்கி கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, அடிக்கடி லேப்டாப்பை சுத்தம் செய்வது நல்லது. அப்படி எல்லா நேரங்களிலும் சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை என்றால், கீபோர்டுகளை வாரம் இரண்டு முறை சுத்தம் செய்யுங்கள், மேலும் மாதம் ஒருமுறை லேப்டாப்பை முழுவதும் சுத்தம் செய்யலாம். 

மேலும் படிக்க | காதல் ஜோடிகளுக்கு ஜாக்பாட்... ரூ. 8 ஆயிரத்திற்கும் கீழ் தரமான மொபைல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News