வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களுக்கு ஜாக்பாட்... ஏர்டெலின் குறைந்த விலையில் புதிய பிளான்!

Airtel Xstream AirFiber Plans: இதுவரை 6 மாத திட்டத்தை மட்டுமே ஏர்டெல் Xstream AirFiber சேவையில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய திட்டமும் அறிமுகமாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 5, 2024, 10:39 AM IST
  • இதில் நிறுவல் கட்டணம் ஏதும் இல்லை.
  • மேலும் டேட்டா பலன்களும் அதிகரிக்கிறது.
  • உங்களுக்கு பணத்தை சேமிக்கவும் முடியும்.
வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களுக்கு ஜாக்பாட்... ஏர்டெலின் குறைந்த விலையில் புதிய பிளான்! title=

Airtel Xstream AirFiber Plans: வீட்டில் இருந்தே வேலை செய்யும் கலாச்சாரம் (Work From Home) கொரோனா தொற்று காலகட்டத்திற்கு பின்னரும் நிலைபெற்றுவிட்டது. வாரம் குறைந்தது இரண்டு நாள்களாவது வீட்டில் இருந்தே வேலைப்பார்க்க நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை அனுமதிக்கிறது. 

இதனால், இணைய சேவையை வீட்டில் நிறுவுவதும் இன்றியமையாததாகிறது. உள்ளூரில் கிடைக்கும் பிராண்ட்பேண்ட் போன்ற இணைய சேவை வழங்குநரை கண்டுபிடித்து, தங்களின் வீட்டில் எதன் சேவை அதிவேகமாக கிடைக்கிறது என்பதையும் சரிபார்த்து, தங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்வு செய்வது வாடிக்கையாளர்களுக்கு சற்று தலைவலியை தரக்கூடியது. 

இருப்பினும், ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தற்போது வயர்லெஸ் இணைய சேவையை நாடு முழுவதும் வழங்கி வருகின்றன. குறிப்பாக, ஏர்டெல் நிறுவனம் தனது  Xstream AirFiber சேவையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இது 5G FWA (Fixed Wireless Access) சேவையாகும். 

இந்த சேவையை அறிமுகப்படுத்திய போது, ஏர்டெல் நிறுவனம் 6 மாத சந்தா திட்டத்துடன் அறிமுகப்படுத்தியது. அதே நேரத்தில், இப்போது நிறுவனம் அதன் 12 மாத திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பைக்கை சர்வீஸ் விடும் போது அதிக செலவு ஏற்படுகிறதா? செலவை குறைக்க வழிகள்!

இந்த புதிய சந்தா திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பலன்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேலிடிட்டி, பலன்கள் மட்டுமின்றி, ஏர்டெல் நிறுவனம் அதன் ரூட்டரின் வடிவமைப்பையும் மாற்றியுள்ளது கவனிக்கத்தக்கது. 

Xstream AirFiber: பெறுவது எப்படி?

ஏர்டெலின் Xstream AirFiber சேவையைப் பயன்படுத்த, ஏர்டெலின் ரீ-டெய்ல் ஸ்டோருக்குச் சென்று அதன் சாதனத்தை வாங்க வேண்டும். இல்லையெனில், அதன் இணையதளத்திற்கு சென்றும் (https://www.airtel.in/xstream-airfiber) Xstream AirFiber சாதனத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். அதன் பிறகு உங்கள் ஸ்மார்ட்போனில் Xstream AirFiber செயலியை பதிவிறக்கம் செய்யவும். இப்போது சாதனத்தில் இருக்கும் QR குறியீட்டை ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்யவும்.

மேலும் இதன் புதிய சந்தா திட்டம் பற்றிய தகவல் ஏர்டெல் இணையதளத்தில் தெரிவிக்கப்டப்டுள்ளது. தற்போது இந்த திட்டம் நொய்டா மற்றும் காஜியாபாத் நகரத்திற்கு மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது, விரைவில் நாடு முழுவதும் அறிமுகமாகும். 

மேலும், புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூட்டரையும் அதன் இணையதளத்தில் காணலாம். முன்னதாக ஏர்டெல் நிறுவனம் அதனுடன் ஒரு தனி ரூட்டரை அறிமுகப்படுத்தியது, ஆனால், சமீபத்திய அப்டேட்டிற்கு பின், ரூட்டரின் வடிவமைப்பு பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது.

12 மாத திட்டம்

6 மாதங்கள் தவிர, இப்போது 12 மாத சந்தா திட்டமும் ஏர்டெல் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் விலை ஜிஎஸ்டி உடன் 11 ஆயிரத்து 314 ரூபாயாகும். இந்த திட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் எந்த நிறுவல் கட்டணமும் (Installation Charge) செலுத்த வேண்டியதில்லை. இந்த திட்டத்தை நிறுவுவதற்கான கட்டணம் இலவசமாகும். இதன் கீழ், வாடிக்கையாளர்கள் 1TB டேட்டாவைப் பயன்படுத்தலாம். இணைய டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு, வேகம் 2 Mbps ஆக குறைகிறது.

6 மாத திட்டம்

Xstream AirFiber அறிமுகமான போதே இந்த 6 மாத திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் திட்டத்தின் விலை 6 ஆயிரத்து 657 ரூபாய் ஆகும். மேலும், இதில் ஜிஎஸ்டி மற்றும் நிறுவல் கட்டணம் 1000 ரூபாய் ஆகியவையும் உள்ளடக்கியது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 100 Mbps வேகத்தில் அதிவேக இணையத்தைப் பெறுவார்கள்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 12 மாத திட்டத்தின் விலையைப் பார்க்கும்போது, மாதத்திற்கு 799 ரூபாய் வருகிறது. அதே நேரத்தில், இப்போது நிறுவனம் இரண்டு நகரங்களுக்கு இந்த 12 மாத திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. வரும் நாட்களில் மற்ற நகரங்களுக்கும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | காதலர் தினத்தில் லவ்வருக்கு கிப்ட் கொடுக்கணுமா...? அதிரடி தள்ளுபடியில் இந்த மொபைல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News