தற்போது இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், Vodafone Idea நிறுவனம் தனது 5G சேவையை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இணையத்தில் வெளியான தகவலின் படி, இந்த ஆண்டுக்குள் தனது 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் வோடபோன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், இது 5ஜி ரீசார்ஜ் விலையில் கணிசமான மாற்றத்தை கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ ஏற்கனவே இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், வோடபோன் இந்த ரேஸில் தாமதமாக நுழைந்துள்ளது.
ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் அதன் 5G சேவையை தற்போது வழங்கி வருகிறது. மேலும் ஏர்டெல் ஆனது இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் அதன் சேவையை வழங்க தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. அதே போல, வோடபோன் நிறுவனமும் இதில் தடம் பதிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் வோடபோன் அதன் 3ஜி நெட்வொர்க்கை விரைவில் நிறுத்த உள்ளது. இந்த ஆண்டு முடிவதற்குள் மகாராஷ்டிரா, மும்பை, ஆந்திரப் பிரதேசம், கொல்கத்தா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 3 ஜி சேவையை நிறுத்த உள்ளது. மேலும் அடுத்த ஆண்டிற்குள் தந்து 3ஜி சேவையை முழுவதும் நிறுத்த உள்ளது.
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மூன்று மாத பேக்குகளுக்கு ரூ. 450 முதல் ரூ. 600 வரை நிறைய திட்டங்களை வைத்துள்ளன. வோடாபோனும் அதே அளவில் தான் அதன் ரீசார்ஜ் திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023, நவம்பரில் ஜியோ நிறுவனம் புதிதாக 3.4 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. மேலும், பார்தி ஏர்டெல் 1.7 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. அதே சமயம் வோடபோன் நிறுவனம் கிட்டத்தட்ட 1 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களை ஒப்பிடும் போது ஜியோ ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனனமான பிஸ்என்எல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9.40 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அதன் முந்தைய மாதத்தை விட இது 49 சதவீதம் அதிகம் ஆகும். ஏர்டெல் நிறுவனம் அதிக சந்தாதாரர்களுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1 சதவீதம் குறைந்துள்ளது. நவம்பர் மாதம் மட்டும் கிட்டத்தட்ட 1 கோடி சந்தாதாரர்கள் MNP கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
ஏர்டெல் vs ஜியோ ஒரு மாத ரீசார்ஜ் பிளான்
- ஏர்டெல்லின் ரூ.499 ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற கால் அழைப்புகளை பெற முடியும். மேலும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், Airtel Extreme, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் 15க்கும் மேற்பட்ட OTT ஆப்ஸ்களை பெற முடியும்.
- ஜியோவின் ரூ. 398 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற கால் அழைப்புகளை பெற முடியும். மேலும், இந்த திட்டத்தின் மூலம் Sony, ZEE5 உட்பட 12 ஓடிதி ஆப்ஸ்களை பெற முடியும்.
மேலும் படிக்க | Paytm Payments Bank -க்கு எதிராக ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ