Safer Internet Day 2022: இணையத்தை பாதுகாப்பாக கையாள்வது எவ்வாறு?

அனைவருக்கும், இண்டர்நெட்டை பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக மாற்றும் நோக்கத்துடன் பாதுகாப்பான இணைய தினம் அனுசரிக்கப்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 8, 2022, 12:35 PM IST
  • இணையத்தை பாதுகாப்பாக கையாள்வது எவ்வாறு?
  • இன்று இண்டர்நெட் பயன்பாட்டின் பாதுகாப்பை உணர்த்தும் நாள்
  • பாதுகாப்பாக இணையத்தை கையாளும் விழிப்புணர்வு நாள் இன்று2
Safer Internet Day 2022: இணையத்தை பாதுகாப்பாக கையாள்வது எவ்வாறு? title=

புதுடெல்லி: ஆண்டுதோறும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தின் இரண்டாவது நாளில் பாதுகாப்பான இணைய தினம் அனுசரிக்கப்படுகிறது. 

ஐரோப்பிய ஆணையத்துடன் இணைந்து ஐரோப்பிய பாதுகாப்பான இணைய மையங்களின் (SICs) Insafe/INHOPE நெட்வொர்க்கால் இந்த நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் 15 நாடுகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இணையத்தை அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக மாற்றும் நோக்கத்துடன் பாதுகாப்பான இணைய தினம் அனுசரிக்கப்படுகிறது.

பாதுகாப்பான இணைய தினத்தின் 19வது ஆண்டான இன்று, "சிறந்த இணையத்திற்காக ஒன்றாக" (Together for a better internet) என்ற கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது.

internet

அதிகரித்து வரும் ஆன்லைன் சிக்கல்கள் மற்றும் தற்போது இருக்கும் இணையதள மோசடிகள் கவலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இணையத்தில் மோசமான விஷயங்களை எதிர்கொள்ளக்கூடும் என்பது தொடர்பான விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்தும் நாள் இது.

நோக்கம்:
பாதுகாப்பான மற்றும் சிறந்த இணையத்தை பெறுவதும் வழங்குவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கம் ஆகும். ஒவ்வொரு பயனரும் தங்கள் தரவு கசியாமல் பொறுப்புடன் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நாள் (Safer Internet Day) அனுசரிக்கப்படுகிறது. 

ALSO READ | விண்வெளியில் போர் மூண்டால்? இண்டர்நெட இயங்காது!

ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள்:
வலுவான கடவுச்சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக பொது வைஃபையில் உலாவ வேண்டாம்.
மின்னஞ்சல் மோசடிகளில் விழ வேண்டாம்.
உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்கவும்.
மோசடி செய்பவர்கள் தொடர்பாக உடனடியாக புகாரளிக்கவும்.
VPN ஐப் பயன்படுத்தவும்.

ALSO READ | 1000 ஆண்டுகள் பழமையான பப் மூடப்பட்டது! காரணம் இதுதான்
 
2004ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும் இணைய பாதுகாப்பு நாளானது, ஐரோப்பிய கூட்டமைப்பின் 'குழந்தைகளுக்கான சிறந்த இணையம்' கொள்கையின் ஒரு பகுதியாகும்.

இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உயர்தர உள்ளடக்கத்திற்கான அணுகலை அதிகரிப்பது, விழிப்புணர்வு மற்றும் அதிகாரமளித்தல், ஆன்லைனில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் குழந்தை பாலியல் சுரண்டலுக்கு எதிராக போராடுவதற்கும் இந்த நாள் முக்கியத்துவம் அளிக்கிறது.

ALSO READ | Mystery: காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News