Mystery: காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்!

உலகில் ஒரு காலத்தில் இருந்த பல தீவுகள் இப்போது காணவில்லை. அவை என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவை தொலைந்து போனதாக கருதப்படுகின்றன.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 3, 2022, 02:44 PM IST
Mystery: காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்! title=

கிரேக்க புராணங்களில் காணாமல் போன அட்லாண்டிஸ் தீவு பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. பலர் அட்லாண்டிஸ் புராணம் மட்டுமே என்று கூறுகிறார்கள். அதே சமயம் உலகில் மறைந்து வரும் பல தீவுகளைப் போலவே இதுவும் மறைந்திருக்க வேண்டும் என்றும் பலர் நம்புகிறார்கள். 

உலகில் ஒரு காலத்தில் இருந்த பல தீவுகள் இப்போது காணவில்லை. அவை என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவை தொலைந்து போனதாக கருதப்படுகின்றன.  இது வரை காணாமல் போயுள்ள தீவுகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன

வோர்டோனிசி தீவு (Vordonisi Island) - துருக்கியின் மாமாரா கடல் தீவு, 1010 இல் நிலநடுக்கத்தால் காணாமல் போனது. இந்த தீவு  2013 இல் மீண்டும் தோன்றிய நிலையில், 2016 ஆம் ஆண்டில் மீண்டும் காணாமல் போனது. 886 ஆம் ஆண்டில் முதலாம் ஃபோடியஸ் என்ற பைசண்டைன் மன்னர் அதன் மீது ஒரு மடத்தை கட்டினார் என்று வரலாற்றில் கூறப்பட்ட நிலையில், தீவு வெளியே தெரிந்த போது அந்த மடத்தையும் காண முடிந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த தீவைப் பற்றி மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ | God of Wine: மாயமாய் மறைந்த மதுவின் கடவுள்! 50 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட சிலை

மாவி தீவு ( Maui Nui  Island )- மாவி தீவு என்பது ஹவாய் தீவுகளின் மிகப்பெரிய தீவு ஆகும். இதில் மேலும் நான்கு தீவுகள் உள்ளன. மாவி, மொலோகாய், லனாய், கஹோலவே தீவு. முன்பு இது பிக் மாவி அல்லது Maui Nui என்ற பெரிய தீவாக இருந்தது. இது தற்போதைய ஹவாய் தீவை விட ஒன்றரை மடங்கு பெரியதாக இருந்தது. இதையும் தற்போது காணவில்லை

ஃபெர்டினாண்டியா தீவு (Ferdinandea ) - இந்த தீவு, சிசிலி நகரத்திலிருந்து 19 மைல் தொலைவில், சில சமயங்களில் மறைந்து, சில சமயங்களில் மீண்டும் தோன்றும். இது முதன்முதலில் 264-241 B.C.E  கண்டறியப்பட்டது.

ALSO READ | 'முடிஞ்சா தொட்டுப்பார்.....' என பாம்பை பதறவைத்த கோழியின் வைரல் வீடியோ 

மொரிஷியா தீவு (Mauritia Island)- டைனோசர்கள் உலகில் இருந்து மறைந்த போது, அவைகளுடன் இந்தியப் பெருங்கடலின் இந்த தீவும் மறைந்துவிட்டது. இந்த தீவை யாரும் பார்த்ததில்லை, எனவே இந்த தீவு புராணமாக மட்டுமே கருதப்படுகிறது.

சாண்டி தீவு (Sandy Island) - இது சேபிள் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. நியூ கலிடோனியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே பவளக் கடலில் அமைந்துள்ள இந்த தீவு சற்று விசித்திரமானது. கூகுள் எர்த்தில் காணப்படும் இந்த தீவு, இது வரை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டாக்டர். மரியா செட்டன் 2012 ஆண்டு பிபிசி நேர்காணலில், இந்த தீவு வரைபடத்திலும் கூகிள் எர்த்திலும் தெரியும், ஆனால் நாங்கள் அங்கு சென்றடைந்தபோது அதனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.

ALSO READ | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News