கூகுளில் ஹேக்கர்கள் ஆபத்து அதிகம் - எச்சரிக்கும் மத்திய அரசு

கூகுள் குரோம் பிரவுசரில் ஹேக்கர்கள் ஆபத்து அதிகம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:15 AM IST
  • கூகுள் பிரவுசரில் ஹேக்கர்கள் ஆபத்து அதிகம்
  • மத்திய அரசு எச்சரிக்கை
  • உடனடியாக அப்டேட் செய்ய அறிவுறுத்தல்
கூகுளில் ஹேக்கர்கள் ஆபத்து அதிகம் - எச்சரிக்கும் மத்திய அரசு title=

மத்திய அரசின் இணையப் பாதுகாப்புப் பிரிவான கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) அண்மையில் அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது. அதில் கூகுள் குரோம் பிரவுசரில் இணையத் தாக்குதல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளது. பிரவுசரில் இருக்கும் கட்டுப்பாடுகளை தவிர்த்து தன்னிசையான குறியீடுகள் மூலம் கூகுள் பிரவுசரின் முழு அணுகலையும் ஹேக்கர்களால் பெற முடியும் எனக் கூறியுள்ளது. 

மேலும் படிக்க | குறைவான EMI-யில் மாருதி பலேனோ -வை சொந்தமாக்குங்கள்..!

CERT-In- புதிய அறிக்கையின்படி, Google Chrome பயனர்கள் ஹேக்கர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் உடனடியாக அதனை அப்டேட் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. இலவசமான பிரவுசிங், ரீடர் மோட், இணைய தேடல், தம்ப்னெயில் டேப், ஸ்கிரீன் கேப்சர், பேமெண்ட்ஸ், எக்ஸ்டென்ஷன் உள்ளிட்டவைகளின் பயன்படுத்துவதில் பாதுகாப்பு குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இவற்றின் மூலம் ஹேக்கர்கள் ஒருவரின் கம்பயூட்டரை எளிதாக ஊடுருவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள இணைய பாதுகாப்பு குழு, இதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என எச்சரித்துள்ளது.

Google Chrome ஐ கைமுறையாக எவ்வாறு புதுப்பிக்கலாம் 

1) Chrome -க்கு செல்க

2) 'Google Chrome about' என்பதைக் கிளிக் செய்யவும்

3) அப்டேட்களை செக் செய்ய வேண்டும்

4) அப்டேட் செய்யப்பட்டதும், புதிய அப்டேட்டில் பிரவுசரை பயனபடுத்த வேண்டும். 

ALSO READ | Oppo Reno 7 Pro 5G விற்பனை இந்தியாவில் தொடங்கியது, முழு விவரம் இதோ

CERT-In என்பது இந்திய அரசாங்கத்தின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முக்கிய நிறுவனமாகும். இது ஹேக்கிங் மற்றும் ஃபிஷிங் போன்ற இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாள்கிறது. இது இந்திய இணைய களத்தின் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. CERT-In ஆனது கடந்த காலத்திலும் கூகுள் குரோமிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில் Chrome 98 -ல் உள்ள பாதிப்புகளை கூகுள் சரி செய்தது. நோடல் ஏஜென்சி ஆலோசனையில், நிலுவையில் இருக்கும் பாதிப்புகள் மிக தீவிரமானது என வகைப்படுத்தியிருந்தால், உடனடி நடவடிக்கையில் கூகுள் இறங்கியது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News