Paytm Payments Bank -க்கு எதிராக ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை

RBI Update: Paytm Payments Bank Ltd (PPBL) க்கு எதிரான ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையானது ஒரு விரிவான முறைமை தணிக்கை அறிக்கை மற்றும் வெளிப்புற தணிக்கையாளர்களின் இணக்க சரிபார்ப்பு அறிக்கைக்கு பின் வந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 31, 2024, 07:16 PM IST
  • பேடிஎம் பயன்படுத்தும் நபரா நீங்கள்?
  • அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.
  • அறிக்கையில் வெளியான தகவல்கள்.
Paytm Payments Bank -க்கு எதிராக ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை title=

RBI Update: பேடிஎம் பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பிப்ரவரி 29, 2024க்குப் பிறகு எந்த ஒரு வாடிக்கையாளர் கணக்கு, ப்ரீபெய்டு கருவிகள், வாலட்டுகள் மற்றும் ஃபாஸ்ட்டேக்குகள் (FASTags) போன்றவற்றில் டெபாசிட்கள் அல்லது டாப்-அப்களை பெறுவதற்கு Paytm Payments Bank Ltd -ஐ ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு புதன்கிழமை வந்தது. 

Paytm Payments Bank Ltd (PPBL) க்கு எதிரான ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) நடவடிக்கையானது ஒரு விரிவான முறைமை தணிக்கை அறிக்கை மற்றும் வெளிப்புற தணிக்கையாளர்களின் இணக்க சரிபார்ப்பு அறிக்கைக்கு பின் வந்துள்ளது. 

அறிக்கையில் வெளியான தகவல்கள்

இந்த அறிக்கைகள் வங்கியில் தொடர்ச்சியான இணக்கமின்மை மற்றும் தொடர்ச்சியான பொருள் மேற்பார்வை கவனக்குறைவுகளை  வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அடுத்த கட்ட மேற்பார்வை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது. “பிப்ரவரி 29, 2024க்குப் பிறகு எந்தவொரு வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்டு கருவிகள், வாலட்கள், FASTag -கள், NCMC கார்டுகள் போன்றவற்றில், எந்த நேரத்திலும் வரவு வைக்கப்படும் வட்டி, கேஷ்பேக்குகள் அல்லது ரீஃபண்டுகளைத் தவிர, மேலும் டெபாசிட்கள் அல்லது கிரெடிட் பரிவர்த்தனைகள் அல்லது டாப் அப்கள் அனுமதிக்கப்படாது." என்று ஆர்பிஐ (RBI) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | EPS-95: ஓய்வூதியதாரர்களின் போராட்டம்....குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க கோரிக்கை

சேமிப்பு வங்கிக் கணக்குகள் (Savings Bank Accounts), நடப்புக் கணக்குகள் (Current Accounts), ப்ரீபெய்ட் கருவிகள், FASTagகள், தேசிய பொது மொபைலிட்டி கார்டுகள் போன்ற தங்கள் கணக்குகளில் இருந்து தங்கள் பண இருப்பை எடுக்க அல்லது பயன்படுத்த வாடிக்கையாளர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மத்திய வங்கி மேலும் கூறியுள்ளது. மார்ச் 2022 இல் இந்திய ரிசர்வ் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதை உடனடியாக நிறுத்துமாறு PPBL க்கு உத்தரவிட்டது.

இந்த அறிவிப்பால் Paytm இன் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் அதாவது UPI இல் எந்த பாதிப்பும் இருக்காது என நம்பப்படுகின்றது. 

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு குறித்து நிறுவனமோ அல்லது அதன் நிறுவனர் / தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மாவோ இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை. மார்ச் 2022 -இல் விடுக்கப்பட்ட ஆர்பிஐ உத்தரவின் தொடர் நடவடிக்கையாக இந்த அறிக்கை பார்க்கப்படுகின்றது. 

அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை Paytm இன் வங்கிச் செயல்பாடுகளுக்குதான் எதிரானது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு வெளிப்புற வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் வரை Paytm ஐ டிஜிட்டல் கட்டண விருப்பமாகத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

டிசம்பரில், One97 கம்யூனிகேஷன் (One97 Communications) AI அதாவது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், செலவைக் குறைக்கும் முயற்சியில் சில செயல்முறைகளை தானியக்கமாக்கத் தொடங்கிய பிறகு, நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலைநீக்கம் செய்தது. AI இன் பயன்பாடு செலவுகளைக் குறைப்பதற்கும், செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தேவையற்ற பணிகளை அகற்றுவதற்கும் பயன்படும் என்று நிறுவனம் கூறியது.

கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி முறைகேடுகளில் ஈடுபடும் வங்கிகள் மீதும், வாடிக்கையாளர்களுக்கான வசதிகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் வங்கிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வரிசையில் பல வங்கிகள் மீது பல வித தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | Med Tech: வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புடன் மருத்துவ தொழில்நுட்பத்தில் முன்னேறத் துடிக்கும் இந்தியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News