தென்னாப்பிரிக்க இரவு விடுதியில் 21 பதின்ம வயதினர் மர்மமான வகையில் மரணம்

தென்னாப்பிரிக்காவில் உள்ள இரவு விடுதியில் மொத்தம் 21 பதின்ம வயதினர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 27, 2022, 04:21 PM IST
  • குளிர்கால பள்ளித் தேர்வுகள் முடிவடைந்ததைக் கொண்டாடுவதற்காக நடந்த விருந்து.
  • பாதிக்கப்பட்டவர்களின் வயது 13 முதல் 17 வரை இருக்கும் என்று காவல் துறை அதிகாரி தகவல்.
  • சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21.
தென்னாப்பிரிக்க இரவு விடுதியில் 21 பதின்ம வயதினர் மர்மமான வகையில் மரணம் title=

தென்னாப்பிரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிழக்கு லண்டனின் கடலோர நகரத்தில் உள்ள இரவு விடுதியில் குறைந்தது 21 பேர் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்து தென்னாப்பிரிக்க போலீசார் விசாரித்து வருகின்றனர், மேலும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குளிர்கால பள்ளித் தேர்வுகள் முடிவடைந்ததைக் கொண்டாடுவதற்காக ஒரு விருந்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர்களின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

உள்ளூர் செய்தித்தாள் டெய்லி டிஸ்பாட்ச், வெளியிட்ட செய்தியில், இளைஞ்சர்களின் உடல்கள் இரவு விடுதியின் மேஜைகள் மற்றும் நாற்காலிகளில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் உடல்களில் காயங்களின் எந்த அறிகுறியும் இல்லாமல் அங்கும் இங்கும் சிதறிக் கிடந்ததாக தெரிவித்தது.

சம்பவம் குறித்து பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் சியந்த மனனா "இந்த கட்டத்தில், முழுமையான விசாரணைக்கு முன்னதாக இறப்புக்கான காரணத்தை எங்களால் உறுதிப்படுத்த முடியாது" என்று  கூறினார். "இறப்புக்கான சாத்தியமான காரணத்தை கண்டறிய விரைவில் பிரேத பரிசோதனைகளை நடத்த உள்ளோம்."

மேலும் படிக்க | அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு தடை; அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பு

பாதிக்கப்பட்டவர்களின் வயது 13 முதல் 17 வரை இருக்கும் என்று காவல் துறை அதிகாரி பெக்கி செலே கூறினார், வயது குறைந்த பதின்ம வயதினருக்கு ஏன் மது வழங்கப்படுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.

"மிக சிறு வயது இளைஞர்கள் ஒரு இடத்தில் கூடியிருந்ததாகக் கூறப்படும் சூழ்நிலைகள் குறித்து ஜனாதிபதி கவலை தெரிவித்தார். 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு இரவு விடுதியில் விருந்து நடத்த அனுமதிக்கப்பட்டது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்" என்று ரமபோசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தான் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாக கிளப்பின் உரிமையாளர் சியாக்கங்கேலா என்டேவு உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

"உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி நான் இன்னும் அறிய முடியாமல் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறேன், ஆனால் காலையில் என்னை அழைத்தபோது, ​​அந்த இடம் மிகவும் மக்களால் நிரம்பியிருப்பதாகவும், சிலர் மதுக்கடைக்குள் வலுக்கட்டாயமாக செல்ல முயற்சிப்பதாகவும் என்னிடம் கூறப்பட்டது," என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | Sunspot AR30398: பூமியை மிக மோசமாக தாக்கும் சூரிய எரிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News