சோபியா லியோன் மரணம்: அடுத்தடுத்து மர்மமாக உயிரிழக்கும் ஆபாச பட நடிகைகள்! பகீர் பின்னணி!

1997-ம் ஆண்டு பிறந்த சோபியா லியோன் தனது 18 வயதில் இருந்து ஆபாச படங்களில் நடித்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு கிட்டதட்ட 9 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.  

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Mar 11, 2024, 01:44 PM IST
  • ஆபாச பட நடிகை மர்ம மரணம்.
  • வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
  • மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சோபியா லியோன் மரணம்: அடுத்தடுத்து மர்மமாக உயிரிழக்கும் ஆபாச பட நடிகைகள்! பகீர் பின்னணி! title=

இந்த ஆண்டு மட்டும் ஆபாச பட நடிகைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 26 வயதே ஆன இளம் ஆபாச பட நடிகையின் மரணம் உலகையே உலுக்கியுள்ளது. இவர்களின் உயிரிழப்புகளுக்கு என்ன காரணம்? தொடரும் மர்மம் என்ன? அமெரிக்காவின் மியாமி நகரை சேர்ந்தவர் தான் பிரபல ஆபாச பட நடிகையான சோபியா லியோன். 26 வயதாகும் இவர் கடந்த மார்ச் 1-ம் தேதி தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள சோபியாவின் வளர்ப்பு தந்தை, நிச்சயம் இந்த மரணம் தற்கொலை அல்ல என்றும், அவரது இறுதி சடங்கிற்கு நிதி திரட்டி வருவதாகவும் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | 5ஆவது திருமணம் அதுவும் 92 வயதில்... யார் இந்த காதல் மன்னன்?

101 என்ற மாடலிங் ஏஜென்சி தங்களின் எக்ஸ் தளத்தில், சோபியாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளது.  1997-ம் ஆண்டு பிறந்த சோபியா லியோன் தனது 18 வயதில் இருந்து ஆபாச படங்களில் நடித்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு கிட்டதட்ட 9 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இவரின் மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இவரது மரணம் பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. அதற்கு காரணம் இந்த ஆண்டு சோபியாவின் மரணம் முதலாவது அல்ல, இதற்கு முன் ஆபாச பட நடிகைகள் காக்னி லின் கார்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தைனா பீல்ட்ஸ் ஆகிய நடிகைகள் உயிரிழந்துள்ளனர். ஒரே ஆண்டில் அடுத்தடுத்து மர்மமாக தொடரும் இவர்களின் மரணம் குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதில் 24 வயதான தைனா பீல்ட்ஸ் ஆபாச படத்துறையில் மோசமாக பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக குற்றம் சாட்டி சர்ச்சையை கிளப்பிய சில மாதங்களிலேயே அவரது வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். அதேபோல 43 வயதான ஜெஸ்ஸி ஜேன் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு அதிக அளவு போதைப்பொருள் உட்கொண்டதே காரணம் என கூறப்படுகிறது. ஆபாச பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக ஜெஸ்ஸி ஜேன் கொடி கட்டி பறந்துள்ளார். இவரைத்தொடர்ந்து கடந்த மாதம் மற்றொரு ஆபாச பட நடிகையான காக்னி லின் கார்டர் மரணம் அடைந்தார். இவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  ஆபாச பட உலகில் கொடி கட்டி பறக்கும் இளம் நடிகைகள் அடுத்தடுத்து மர்மமாக உயிரிழப்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் பதவியேற்று கொண்ட சீக்கிய அமைச்சர்... யார் அந்த ரமேஷ் சிங் அரோரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News