Elections: இன்று வாக்குப்பதிவு, நாளை முடிவுகள்... ஆனால் பிரதமர் இவர் தான்

Bangladesh PM Sheikh Hasina: எதிர்க்கட்சிகளே கலந்துக் கொள்ளாத பொதுத்தேர்தல்! பங்களாதேஷில் இன்று வாக்குப்பதிவு, நாளை முடிவுகள்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 7, 2024, 10:51 AM IST
  • பங்களாதேஷ் தேர்தல் 2024
  • நான்காம் முறையாய் பிரதமராகும் ஷேக் ஷசீனா
  • தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கும் பிரதமர் ஹசீனா
Elections: இன்று வாக்குப்பதிவு, நாளை முடிவுகள்...  ஆனால் பிரதமர் இவர் தான் title=

இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ், இன்று பொதுத்தேர்தல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று நடைபெறும் நிலையில், நாளை மாலைக்குள் (ஜனவரி 8) தேர்தல் முடிவுகள் வந்துவிடும். கிட்டத்தட்ட 170 மில்லியன் மக்கள் வசிக்கும் நாடு, கிட்டத்தட்ட 119 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும்.  

தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது உலகத்திற்கே தெரிந்தது தான். ஏனென்றால், எதிர்க்கட்சிகளில் மிகப்பெரிய கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியும்  அதன் கூட்டணிக் கட்சிகளும், பிரதமர் ஷேக் ஹசீனா சுதந்திரமான மற்றும் நியாயமான ஒரு தேர்தலை நடத்துவார் என்பதில் நம்பிக்கை இல்லை என்று கூறுகின்றன.

முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (BNP) தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலை புறக்கணித்துள்ளது. ஷேக் ஹசீனாவைப் பதவி விலகுமாறும், நடுநிலையான இடைக்கால அரசாங்கத்தின் கீழ் தேர்தல் நடத்த அனுமதிக்குமாறும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

மேலும் படிக்க | பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட கோவை லோகநாதன்

அந்தக் கோரிக்கையை ஷேக் ஹசீனா அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே முக்கிய எதிர்கட்சியோ அவர்களின் கூட்டணியோ தேர்தலில் போட்டியிடாத நிலையில், ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் களம் காணும் தேர்தலின் முடிவுகள், தற்போதைய கட்சியே ஆட்சியைத் தொடரும் என்பதை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது.

வங்களதேசத்தில் ஜனநாயகம் இறந்து விட்டது.  நாம் பார்க்கப் போவது போலித் தேர்தல் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி, 2009ல் ஆட்சிப்பீடத்தில் ஏறிய பிறகு, தொடர்ந்து நான்காவது முறையாக அதிகாரப் பாதையில் தனது பிடியைத் தொடரும். வங்கதேசத்தில் கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் ஹசீனாவின் கட்சி 84 சதவீதம் மற்றும் 82 சதவீத வாக்குகளைப் பெற்றது.  

மேலும் படிக்க | “மம்தாவிடம் பிச்சை கேட்கவில்லை” மேற்கு வங்கத்தில் 2 சீட் ஒதுக்கியதால் காங்கிரஸ் கோபம்

தெற்காசிய நாடான பங்களாதேஷ் நாட்டின் தந்தைஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளான ஷேக் ஷசீனா, அண்மை ஆண்டுகளில் மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் இருந்து வெளியே கொண்டு வந்ததாக சொல்கிறார். பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை மையமாகக் கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள், இஸ்லாமிய நாட்டில் சாத்தியமாகியிருக்கிறது.

பங்களாதேஷின் பொருளாதாரத்தின் முன்னேற்றம் என்பது, அதன் அண்டை நாடுகளும், ஆசிய ஜாம்பவான்களான இந்தியா மற்றும் சீனாவுடன் சமச்சீர் புவி பொருளாதாரத்தின் பலன்களை அறுவடை செய்யும் ஹசீனாவின் திறமைக்கு சான்றாக பொருளாதார நிபுணர்கள் பார்க்கின்றனர்.  

ஆனால், நாட்டின் பல கட்சி ஜனநாயகத்தை ஒரே கட்சியாக மாற்ற முயற்சிப்பதாக ஹசீனாவின் நிர்வாகம் மீது பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், இன்றையத் தேர்தல்கள் சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகின்றன. 

மேலும் படிக்க | தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீடு... வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் - முழு பின்னணி இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News