லண்டன்: இங்கிலாந்து மகாராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு சீன பிரதிநிதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன தூதரகம் இந்த நடவடிக்கையை விமர்சித்தது. மேலும், சீன பிரதிநிதிகள் பிரிட்டன் மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த விதிக்கப்பட்ட தடை "தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக சீனாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பைத் தடுக்க இங்கிலாந்து பாராளுமன்றத்தின் சில தனிநபர்களின் வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான நடவடிக்கை" என்று சீனா கூறியது.
தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மரியாதை செலுத்துவதற்காக சீன பிரதிநிதிகள் செல்வதை தடுத்து நிறுத்திய செயல் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சீன பிரதிநிதிகளுக்கு நுழைய அனுமதி மறுத்ததன் பின்னணி என்ன தெரியுமா?
மேலும் படிக்க | எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பின் கோஹினூர் வைரம் இனி யாரிடம் செல்லும்?
"பொய்கள் மற்றும் தவறான தகவல்களை" பரப்பியதாக ஏழு பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களை சீனா முன்பு குற்றம் சாட்டப்பட்டியதால், சீன துணை அதிபர் தலைமையிலான வாங் கிஷான் அடங்கிய சீன பிரதிநிதிகள் குழு, ராணிக்கு இறுதி மரியாதை செய்வதற்கு அனுமதிக்கபப்டவில்லை.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தற்போது உஸ்பெகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் 2022 இல் கலந்து கொண்டுள்ளார். தற்போது, பிரிட்டிஷ் மகாராணியின் மரணத்திற்குப் பிறகு வாங் இங்கிலாந்துக்கு சென்றார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையின் சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல் எடுத்த முடிவு குறித்து சீனாவிற்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை விமர்சித்த சீனத் தூதரகம், துணைத் தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவிற்கு விதிக்கப்பட்ட தடை, தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக சீனாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பைத் தடுப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சீனாவின் துணை அதிபர் ராணிக்கு இறுதி மரியாதை செய்ய அனுமதிக்கப்படலாம் என்று பொலிட்டிகோ தெரிவித்துள்ளது.
முன்னதாக, ராணியின் மறைவுக்கு ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்தார். "சீனா-இங்கிலாந்து உறவுகளின் வளர்ச்சிக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன், மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக அளவிலான இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 50 வது ஆண்டு நிறைவை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, மூன்றாம் சார்லஸ் மன்னருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது அவசியம் என்று சீனா தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இங்கிலாந்து ராணிக்கு இறுதி மரியாதை! துக்க அஞ்சலி செலுத்தும் பிரிட்டன்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ