Bid Adieu: இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி தனது 96-வது வயதில் மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்குக் பிறகு நேற்று லண்டன் கொண்டு வரப்பட்டது.
பக்கிங்ஹாம் அரண்மனையில் அதிகாரிகளும், அரண்மனை பணியாளர்களும் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு ராணுவ மரியாதையுடன் கொண்டு வரப்பட்டது.
மேலும் படிக்க | எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பின் கோஹினூர் வைரம் இனி யாரிடம் செல்லும்?
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிப் பயணம் செப்டம்பர் 14ம் தேதி லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்குத் தொடங்கியது. ஊர்வலத்தில் அவரது நான்கு குழந்தைகளும் கலந்துக் கொண்டனர். பேரக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், என துக்கத்தில் அரசியின் குடும்பம் ஒன்றுபட்டது.
ராணிக்கு கடைசி அஞ்சலி
14 மணி நேரம் காத்திருந்து மக்கள் ராணிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்
பிரிட்டனின் மன்னராக பொறுப்பேற்றுக்கொண்ட ராணி இரண்டம் எலிசபெத்தின் மகன் மூன்றாம் சார்லஸ், தாயின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் சிம்மாசனத்தின் வாரிசு இளவரசர் வில்லியம் என அரசக் குடும்பத்தினர் அனைவரும் கலந்துக் கொண்ட இறுதி ஊர்வலம்
ராயல் ஸ்டாண்டர்ட் மற்றும் இம்பீரியல் ஸ்டேட் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது
70 ஆண்டு காலமாக மகாராணியாக சிம்மாசனத்தை அலங்கரித்தார் இரண்டாம் எலிசபெத்
ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 4 கி.மீ. தூரத்திற்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
பிரிட்டனின் சூரியன் அஸ்தமமானது.
லண்டனில் உள்ள மேஃபேரில் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்குள் அடங்குக்கிறார்