லவ் பண்லாமா வேணாமா...? கணவரின் ரகசிய காதலியை அறிந்த மனைவி - அப்புறம்தான் ட்விஸ்ட்டே!

இங்கிலாந்தில் இளம்பெண் ஒருவர், தனக்கு திருமண வாழ்வில் ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து, அவரின் பதிவுக்கு வைரலானதை அடுத்து, பலரும் அதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

Written by - Sudharsan G | Last Updated : Oct 14, 2022, 11:08 PM IST
  • இங்கிலாந்தை இளம்பெண்ணின் ரெட்டிட் தளத்தில் போட்ட பதிவு வைரலாகியுள்ளது.
  • இளம்பெண் அவரின் உறவு குறித்து குழப்பத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
லவ் பண்லாமா வேணாமா...? கணவரின் ரகசிய காதலியை அறிந்த மனைவி - அப்புறம்தான் ட்விஸ்ட்டே! title=

திருமணத்தால் ஏற்பட்ட உறவு, திருமணத்திற்கு முன்னான உறவு, திருமணத்தை மீறிய உறவு ஆகியவை குறித்த செய்திகளை தினமும் நாம் கடந்து செல்கிறோம். திருமணம் என்ற அமைப்பு இந்தியா உள்பட பல நாடுகளிலும் சிக்கலுக்குரியதாகவே இருந்து வருகிறது. சட்ட ரீதியான மணமுறிவுகள் மட்டுமின்றி, நீதிமன்றங்களுக்கு செல்லாமலும் பல இடங்களில் மணமுறிவுகள் ஏற்படுகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது திருமண வாழ்வில் ஏற்பட்ட அனுபவத்தை 'ரெட்டிட்' சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

36 வயதான லூசி என்ற பெண்ணுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 38 வயதில் ஜாக் என்ற கணவரும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 6 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. அவரின் கணவர் வேறொரு பெண்ணுடன் பாலியல் ரீதியான உறவில் இருந்தது வந்தது லூசிக்கு தெரியவந்துள்ளது. கணவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் 30 வயதான லில்லி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் தான் அவர் உறவில் இருக்கிறார் அறிந்தவுடன், லூசி மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். 

மேலும், தங்களுக்கு இடையே எந்தவொரு பிரச்சனையோ, முரண்பாடுகளோ இல்லை என்றும் லூசி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதைவிட, லூசி அதிர்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணம், அவருடைய கணவர், உறவில் இருந்து லில்லியின் கணவரான ஜான் தான், லூசியிடம் இந்த தகவலை கூறியுள்ளார்.  

மேலும் படிக்க | அதிக செக்ஸ் உணர்வு... பெண்களை சமாளிக்க முடியவில்லையா - ஆண்களுக்கு சில அட்வைஸ்!

தொடர்ந்து, ஜாக் - லில்லி ஆகியோருக்கு இடையேயான மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்களையும் ஆதாரமாக லூசிக்கு மொபைலில் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, அவர்கள் இருவரும் பல நேரங்களில் ஹோட்டல்களில் தனிமையில் இருந்த தகவல்களையும் லூசிக்கு அனுப்பியுள்ளார். அந்த மெசேஜ்கள் தனது கணவர் அனுப்பவதை போன்ற இருப்பதை உணர்ந்த லூசி, அது தனது கணவருடையதுதான் என்றும், தன்னை அவர் ஏமாற்றிவிட்டார் என்பதையும் உணர்ந்துள்ளார். 

இதையடுத்து, லூசி - ஜான் இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டு, அவர்களின் இணையர்களின் அத்துமீறல்கள் குறித்து பேசியுள்ளனர். மேலும், கரோனா காலத்தில் தனக்கு வேலை இல்லாததால் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும், தனது கணவரை விவாகாரத்து பெற்றால் குழந்தையும், தானும் இன்னலுக்கு ஆளாவோம் என லூசி, ஜானிடம் தெரிவித்துள்ளார். மேலும்,  ஜான் - லில்லி தம்பதிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளன. 

இதனால், தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி தங்களின் இணையர்களின் ரகசிய உறவு குறித்து அவர்களிடம் எதுவும் கேட்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர். இந்த இடைப்பட்ட நேரத்தில், லூசி - ஜான் இருவரும் அதிக நேரங்களை சேர்ந்து செலவழித்துள்ளனர். போன், சாட்டிங், திரைப்படம் என சென்ற நாள்களில் லூசி - ஜான் இருவரும் தங்களை குறித்து நன்கு தெரிந்துகொண்டனர். இதையடுத்து, ஒரு நாளில், ஜான், லூசியை காதலிப்பதாக கூறியுள்ளார். 

ஜானின் மீதும் லூசிக்கும் இனம்புரியாத உணர்வு ஒன்று மேலெழுந்து வந்துள்ளது. இருப்பினும், இது இயல்பான காதல் உணர்வா அல்லது ஏமாற்றத்தால் விளைந்ததா என லூசி மிகவும் குழப்பமடைந்துள்ளார்.  தற்போது, லூசியும் தனக்கும் ஜான் மீது காதல் தான் இருக்கிறது என்பதையும் உணர்ந்துள்ளார். இந்த காதல் தனது பிரச்சனையை போக்குமா அல்லது நீட்டிக்கச்செய்யுமா என தொடர்ந்து குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மேலும், திருமண அமைப்பில் நீடிக்கும் சிக்கல் குறித்தும் உலகளவில் விவாதத்தையும் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மனைவி வீட்டில் இல்லாத போது கணவர் என்ன எல்லாம் செய்வாங்க தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News