வெள்ளை மாளிகையின் நிரந்தர வேந்தன் நான் தான் என்கிறாரா டொனால்ட் ட்ரம்ப்..!!!

முன்னதாக டொனால்ட் டிரம்ப் 2020 தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால், தேர்தல் முறை குறித்து பல கேள்விகளை எழுப்பியிருந்தார். ஜோ பிடன், மோசடி செய்து வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 16, 2020, 01:46 PM IST
  • முன்னதாக டொனால்ட் டிரம்ப் 2020 தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால், தேர்தல் முறை குறித்து பல கேள்விகளை எழுப்பியிருந்தார். ஜோ பிடன், மோசடி செய்து வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டினார்.
  • ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்கத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார்.
  • இந்த விவகாரத்தில் டிரம்பிடம் எந்த ஆதாரமும் இல்லாததால், டிரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டார்.
வெள்ளை மாளிகையின் நிரந்தர வேந்தன் நான் தான் என்கிறாரா டொனால்ட் ட்ரம்ப்..!!! title=

2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடனின் வெற்றியின் பின்னர், இப்போது டொனால்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். முன்னதாக டொனால்ட் டிரம்ப் 2020 தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால், தேர்தல் முறை குறித்து பல கேள்விகளை எழுப்பியிருந்தார். ஜோ பிடன், மோசடி செய்து வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டினார்.

ட்ரம்ப் ட்வீட் செய்து 'நான் தேர்தலை வென்றேன்!' எனக் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ( Donald Trump) தனது தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு தேர்தல் முறை குறித்தும் நடந்த மோசடிகள் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். பிடனின் வெற்றியை அவர் ஏற்றுக்கொண்டாலும், தேர்தல்களில் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன் வைக்கிறார். டொமினியன் வாக்களிப்பு முறையின் முடிவுகளை அவர் மட்டுமல்ல, பல பெரிய நிறுவனங்களும் ஏற்க மறுத்துவிட்டதாக டிரம்ப் கூறினார்.  அமெரிக்க அதிபர் தேர்தல் விவகாரங்களை உலகம் கவனித்து வருவதாக டிரம்ப் கூறினார்.

ALSO READ | மாபெரும் பணக்காரி மெலானியாவா? இல்லை இவாங்காவா? @Trump

முன்னதாக, ட்ரம்ப் ட்வீட் செய்து, "ஆம், பிடென் தேர்தலில் வெற்றி பெற்றார், ஆனால் தேர்தலில் மோசடி நடந்துள்ளது" என்று கூறியிருந்தார். தேர்தலின் போது, ​​கண்காணிப்பு பணியை மேற்கொள்ள எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றார். டொமினியம் என்ற நிறுவனம் மீது அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தலில் பிடென் வெற்றி பெற்றார், ஆனால் போலி ஊடகங்களின் பார்வையில் டிரம்ப் ட்வீட் செய்தார்.

உண்மையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் (Joe Biden) அமெரிக்கத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார். அவர் கடுமையான போட்டி கொடுத்து டிரம்பை தோற்கடித்தார். அதன் பின்னர் ஜோ பிடன் இப்போது 46 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் 1900 க்குப் பிறகு அதிக வாக்குகள் கிடைத்தன. பிடென் 7 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு முன்னர் எந்த அதிபரும் இவ்வளவு வாக்குகளைப் பெறவில்லை.

அமெரிக்க அதிபர்  (US Presedential Election) தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்த முடிவுகளுக்கு எதிராக ஒரு நீண்ட போரில் ஈடுபடுவேன் என்று டிரம்பிலிருந்து தொடர்ந்து பதில் வருகிறது. தேர்தல் முடிவுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு செல்வேன் என்று அவர் தெளிவாகக் கூறியிருந்தார். அதே நேரத்தில்,  ட்ரம்பை அடிக்கடி தேர்தலில் மோசடி ஏற்பட்டுள்ளதாக வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பேசும்போது, தேர்தல் நடைமுறையிலும், முடிவுகளை அறிவித்ததிலும் எந்த விதமான மோசடியும் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் கூறினார். இந்த விவகாரத்தில் டிரம்பிடம் எந்த ஆதாரமும் இல்லாததால், டிரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டார்.

ALSO READ | வட கொரியாவின் விந்தை அதிபர் கிம் ஜாங் உன்னை மீண்டும் காணவில்லை... !!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News