மர்மங்கள் நிறைந்தது வாடகொரிய நாடு... அதை விட அதிக மர்மங்கள் நிறைந்தது வட கொரிய அதிபரின் வாழ்க்கை மற்றும் செயல்கள்.
விந்தையான வட கொரியாவின் (North Korea) அதிபர் கிம் ஜாங் உன் ( Kim Jong Un) , உலக தலைவர்களில் மிகவும் வித்தியாசமானவர். அவர் கொடுக்கும் உத்தரவுகளும் அளிக்கும் தீர்ப்புகளும் மிகவும் கொடூரமனவையாகவும் வினோதமானவையாகவும் இருக்கும்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) தனது எதிராளிகளை, தன்னை எதிர்ப்பவர்களுக்கு வழங்கும் தண்டனைகளை கேட்டால் நமக்கு குலை நடுங்கும். அவரது மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில், தன்னை எதிர்ப்பவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காகவே, பிரான்ஹா வகை மீன்களை (piranha fish) வளர்ப்பதாக கூறப்படுவதுண்டு.
அக்டோபர் 10 ம் தேதி வட கொரியாவின் ஆளும் கட்சியின் 75 வது பிறந்த நிறுவக தினத்தை கொண்டாடுவதற்காக நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் உரையாற்றினார். படை வீரர்களின் தியாகங்களுக்கு நன்றி தெரிவித்த அவர், குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தவறியதற்காக மன்னிப்பு கேட்டார். கண்ணீர் சிந்தினார்.
ஹிட்லரை விஞ்சும் அளவிற்கு செயல்படும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் கண்ணீரை கண்டு உண்மையில் உலக மக்கள் குழப்பம் தான் அடைந்தனர்.
ALSO READ | Kim Jong Un: புலி பதுங்கியது எதற்கு? “Sorry" -க்கு பின்னால் உள்ள மர்மம் என்ன?
இந்நிலையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் காணாமல் போயுள்ளார். அவர் கடைசியாக பொதுவில் தோன்றி 23 நாட்கள் ஆகின்றன.
கிம் ஜாங் உன் கடைசியாக அக்டோபர் 21 அன்று பொதுவில் தோன்றினார். 1950-53 கொரியப் போரில் நாட்டை காக்க சீன (China) வீரர்களுக்கு எதிராக போரிட்டும் போது உயிரை இழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக அவர் தெற்கு பியோங்யாங் மாகாணத்தில் உள்ள ஒரு கல்லறைக்குச் சென்றார்.
கடந்த சில மாதங்களாகவே கின் ஜாங் உன் அவ்வப்போது பொதுமக்கள் பார்வையில் இருந்து காணாமல் போகிறார். 2020 ஏப்ரல் மாதம். அவரது உடல்நிலை குறித்து பல விதமாக வதந்திகள் எழுப்பப்பட்டன. அவர் இறந்து விட்டார் என்று கூட கூறப்பட்டது. கிம் ஜாங் உன்னின் இடத்தை யார் கைப்பற்றுவார் என்பது குறித்தும் பல செய்திகள் பரவின. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஒரு உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இவர் இப்படி பொது மக்கள் மத்தியில் தோன்றாமால் இருப்பது அடிக்கடி நிகழ்வதால், அதிகாரிகள் இது குறித்து அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதெல்லாம் எங்களுக்கு சாதாரணமப்பா என்பது போல் இருக்கின்றனர். மீண்டும் காணாமல் போயுள்ள வட கொரிய தலைவர் மீண்டும் எப்போது தலை காட்டுவார், மர்ம முடிச்சுகள் எப்போது அவிழும் என தெரியவில்லை.
ALSO READ | Kim Jong Un சிந்திய கண்ணீர்.. என்னப்பா நடக்குது என வியக்கும் உலகம்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR