தாயின் சடலத்தை 10 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்

ஒரு தசாப்த காலமாக தாயின் சடலத்தை தனது வீட்டில் ஒரு பெண் மறைத்து வைத்துள்ளார். விஷயம் அம்பலமானதும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2021, 08:29 PM IST
  • அம்மாவின் சடலத்தை 10 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்
  • வீட்டின் freeze-இல் சடலம்
  • வாடகை கொடுக்க முடியாமல் வீட்டை காலி செய்தபோது ரகசியம் அம்பலம்
தாயின் சடலத்தை 10 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்   title=

ஒரு தசாப்த காலமாக தாயின் சடலத்தை தனது வீட்டில் ஒரு பெண் மறைத்து வைத்துள்ளார். விஷயம் அம்பலமானதும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தாய் இறந்த தகவல் வெளியே தெரிந்தால் குடியிருக்கும் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று அஞ்சியதாக போலீசாரின் விசாரணையில் Yumi Yoshino என்ற பெண் தெரிவித்தார். 

48 வயதான Yumi Yoshino என்ற பெண், 10 வருடங்களுக்கு முன்பு இறந்த தாயின் உடலை மறைத்து வைத்திருப்பதாகக் கூறினார். தனது வீட்டில் இருந்த freezer ஒன்றில் தாயின் சடலத்தை அந்தப் பெண் மறைத்து வைத்துள்ளார். ஏனெனில் அவர் தனது தாயுடன் வசித்த வீட்டிலிருந்து "வெளியேற விரும்பவில்லை" என்று தெரிவித்தார். 

60 வயதான Yumi Yoshino-வின் தாய், நகராட்சி வீட்டுவசதி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் குத்தகைக்கு எடுத்து மகளுடன் வசித்து வந்தார்.

Also Read | January 30, 2021: உலகில் இன்றைய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவை

தற்போது, குத்தகை வாடகையை கொடுக்க முடியாமல் போனதால், ஜனவரி நடுப்பகுதியில் யோஷினோ குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பிறகு துப்புரவுப் பணியாளர்கள் வீட்டை சுத்தம் செய்தனர். அப்போதுதான், மறைத்து வைக்கப்பட்ட  freezer ஒன்றில் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

பிரேத பரிசோதனையில், அந்த பெண்ணின் மரணத்திற்கான நேரத்தையும் காரணத்தையும் தீர்மானிக்க முடியவில்லை.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News