January 30, 2021: உலகில் இன்றைய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவை

January 30, 2021: இந்தியா உட்பட உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த முக்கியச் செய்திகள் இவை...  ஆயிரக்கணக்கான செய்திகள் ஊடகங்களில் வந்தாலும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ள சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2021, 06:53 PM IST
  • அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலை சேதம் .. இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பு..!!
  • பிரபல தொலைக்காட்சி நேரலையில் காணப்பட்ட செக்ஸ் பொம்மை, அதிர்ந்து போன செய்தியாளர்..
  • நவல்னியின் சகோதரர் மற்றும் கூட்டாளிகளுக்கு வீட்டுக் காவல் விதித்தது ரஷ்ய நீதிமன்றம்
January 30, 2021: உலகில் இன்றைய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவை title=

புதுடெல்லி: நிகழ்வுகள் பலவும் செய்திகளாக தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருந்தாலும், பிரதானமான செய்திகளுக்கென முக்கிய இடம் உண்டு. இன்றைய முக்கியச் செய்திகளாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த சில செய்திகள் இவை, உலகம் முழுவதும் இன்றைய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவை...  

கொரோனா வைரஸ் தடுப்பூசியாக அஸ்ட்ராசெனெகா (AstraZeneca) தடுப்பு மருந்துக்கு வியட்நாமின் சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.  கோவிட் -19 க்கு எதிரான முதல் தடுப்பூசியை வியட்நாம் அங்கீகரித்துள்ளது.  

அஸ்ட்ராசெனெகா-ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி, பிற கொரோனா தடுப்பூசிகளை விட விலை மலிவானது மற்றும் குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலையில் சேமிக்க முடியும் என்பது, இந்த தடுப்பு மருந்தின் சிறப்பான அம்சமாகும். இது போக்குவரத்து மற்றும் பயன்பாட்டை எளிதாக்குகிறது, அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு மிகவும் ஏற்றது அஸ்ட்ராசெனெகா-ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி என்று கூறப்படுகிறது.

Also Read | அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலை சேதம் .. இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பு..!!

அம்மாவின் உறைந்த சடலத்தை 10 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்  

ஒரு தசாப்த காலமாக தனது தாயின் சடலத்தை தனது வீட்டில் ஒரு பெண் மறைத்து வைத்துள்ளார். விஷயம் அம்பலமானதும் விசாரிக்கப்பட்ட போது, தாய் இறந்த பிறகு அது பற்றிய தகவல் வெளியே தெரிந்தால் அங்கிருந்து வெளியேற்றப்படலாம் என்று அஞ்சியதாக அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்தார். தனது வீட்டில் இருந்த freezer ஒன்றில் தாயின் சடலத்தை அந்தப் பெண் மறைத்து வைத்துள்ளார்.

doll

நவல்னி-யின் (Navalny) சகோதரர் மற்றும் கூட்டாளிகளுக்கு வீட்டுக் காவல் விதித்தது ரஷ்ய நீதிமன்றம் 

ஜெர்மனியில் இருந்து மாஸ்கோவிற்கு வந்த பின்னர் ரஷ்யாவை விமர்சிக்கும் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டார். பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்குப் பிறகும் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.  இப்போது, ரஷ்ய நீதிமன்றம் நண்பர்களையும் நவால்னியின் சகோதரரையும் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது, நாட்டில் புடின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் எழலாம் என்று அஞ்சப்படுகிறது.

Also Read | பிரபல தொலைக்காட்சி நேரலையில் காணப்பட்ட செக்ஸ் பொம்மை

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கண்டனத்தையும் கண்டு கொள்ளாமல், பலூச் இனத்தைச் சேர்ந்த Javid Dehghan Khalad என்பவரை ஈரான், 'பயங்கரவாதத்தி' என்று சொல்லி மரணதண்டனையை நிறைவேற்றியது.இந்த மரணதண்டனைக்கு எதிராக சர்வதேச சமூகம் கண்டனங்களை தெரிவித்தது. ஆனால் அவற்றை புறந்தள்ளிய இரான், கொலை, கடத்தல் மற்றும் 'பயங்கரவாத' தொடர்புகளுக்காக சனிக்கிழமையன்று Javid Dehghan Khalad என்பவரை இரான் தூக்கிலிட்டது.  

ஜிகாதி குழுவான ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl (Army of Justice)) உடன் தொடர்புடைய "பயங்கரவாத" குழுவின் "தலைவர்களில் ஒருவர்" என்று 2015 ஜூன் மாதம் Javid Dehghan Khalad  கைது செய்யப்பட்டார்.

உலகின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுள் ஒன்றான BBC Wales தொலைக்காட்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை நேரலை நேர்க்காணல் இடம் பெற்றது. கொரோனா வைரஸால் (corona pandemic) உலகம் முழுவதும் ஏற்பட்ட வேலை இழப்பு மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிப்பதற்காக இந்த நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், விட்டி ஆமோஸ் (Yvette Amos) என்ற பெண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கங்களை கொடுத்தார். ஆன்லைன் வழியாக நடைபெற்ற இந்த நேரலை நேர்க்காணலில் பங்கேற்ற விட்டி ஆமோஸின் பின்புறத்தில் புத்தக அலமாரி ஒன்று இருக்கிறது. அதில், அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்கு நடுவே ஆணுறுப்பு (plastic penis) பாலியல் பொம்மை வைக்கப்பட்டுள்ளது. அந்த பொம்மை நேரலையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தெரிந்ததால், பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News