கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா தொடர்பான பாகிஸ்தானின் புதிய சதி அமபல்மாகியுள்ளது. கர்தார்பூர் குருத்வாரா கட்டுப்பட்டை ISI வசம் ஒப்படைத்து பாகிஸ்தான் மீண்டும் ஒரு புதிய சதி வேலையில் இறங்கியுள்ளது. இதன் மூலம் சீக்கியர்களின் புனித இடமான கர்த்தர்பூர் சாஹிப் குருத்வாராவை பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
கர்தார்பூர் (Kartharpur) சாஹிப் நிர்வாகம் சிரோன்மணி குருத்துவாரா பிரபந்த கமிட்டி SGPC-யிடமிருந்து பறிக்கப்பட்டு ETPB என்ற முஸ்லிம் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் கர்த்தார்பூர் நடைபாதையைத் திறந்து வைத்தபோது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) தன்னை உலகின் மிக தாராள மனப்பான்மை கொண்ட மனிதர் என்று நிரூபிக்க முயன்றார். ஆனால் வெறும் 1 வருடத்தில், அவர்களின் சாயம் வெளுத்து விட்டது. பாகிஸ்தானின் உண்மையான முகம் இதன் மூலம் உலகுக்கு அம்பலம் ஆகியுள்ளது.
கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவின் பராமரிப்பு பணிகள் பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்தக் குழுவிலிருந்து பறிக்கப்பட்டு Evacuee Trust Property Board -ETPB இடம்கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குருத்வாராவைப் பராமரிக்கும் பணியை மேற்கொள்ள அமைக்கப்பட்டிருக்கு இந்த குழுவில் ஒரு சீக்கிய உறுப்பினர் கூட இல்லை.
இம்ரான் கான் அரசு இப்போது குருத்வாராவிடமிருந்தும் பணம் கறக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ETPB என்பது பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ கட்டுபாட்டில் உள்ள அமைப்பு.
புதிய நிர்வாகக் குழு ஐ.எஸ்.ஐ (ISI) உடன் எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதற்கு, அதன் முதல் தலைவர், ஐ.எஸ்.ஐ. தலைவர் ஜாவேத் நாசர் என்பதே முக்கிய சான்று. இப்போது முகமது தாரிக் கான் கர்த்தார்பூர் அமைப்பிற்கு தலைமை தாங்குகிறார்.
பஞ்சாபில் (PUNJAB) பிரிவினைவாத உணர்வைத் தூண்டுவதற்கான சதியும் அம்பலமாகியுள்ளது.
உண்மையில், ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் திடீரென கர்த்தார்பூர் நடைபாதையைத் திறப்பது குறித்து பேசியபோது, இந்தியாவின் பல பாதுகாப்பு வல்லுநர்கள் அண்டை நாட்டின் இந்த தாராள மனப்பான்மை குறித்து சந்தேக கேள்விகளை எழுப்பினர். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த கர்தார்பூர் சாஹிப்பின் நிர்வாகத்தை பறித்து ஐ.எஸ்.ஐ.க்கு சொந்தமான ஒரு அமைப்புக்கு வழங்குவதற்கான முடிவு இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. கர்தார்பூர் நடைபாதையை திறப்பதன் பின்னணியில் பாகிஸ்தானின் உண்மையான நோக்கம் பஞ்சாபில் பிரிவினைவாத உணர்வைத் தூண்டுவது தானா என்பதே அந்த கேள்வி.
பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மற்றும் இராணுவம் எப்போதும் இந்தியாவை (India) சீர்குலைக்க தொடர்ந்து சதி செய்கிறது. பஞ்சாபில் அமைதி மற்றும் நல்லிணக்க சூழ்நிலையை கெடுக்க, பாகிஸ்தான் இப்போது இந்த நடைபாதை வழியாக காலிஸ்தானிய அடிப்படைவாதிகளைப் பயன்படுத்திக் கொள்ள சதி செய்கிறது. அவரது அழுக்கு நோக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், 'கர்தார்பூர் குருத்வாரா நிர்வாக விஷயத்தில் பாகிஸ்தான் எடுத்த முடிவை இந்தியா கண்டித்துள்ளது. இந்த முடிவு சீக்கிய சமூகத்தின் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் உண்மையான முகம் மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் நலன்களைப் பற்றி பாகிஸ்தான் பேசும் இடத்தில், சீக்கிய சமூகத்திடமிருந்து கர்தார்பூரை நிர்வகிக்கும் உரிமையை பறித்தது மிகவும் தவறான முடிவு. கர்த்தார்பூர் சாஹிப் குருத்வாரா தொடர்பான இந்த முடிவை பாகிஸ்தான் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது.