உலகின் மிக சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் வாக்குகளின் எண்ணிக்கை தொடர்கிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் அதிபர் பதிவியில் போட்டியிட்டனர். நவம்பர் மாதம் 3ம் தேதி வாக்கு பதிவு நடந்து, வாக்குகள் எண்ணப்பட்டன.
நவம்பர் மாதம்3ம் தேதி வாக்குபதிவிற்கு முன்னதாகவே, பல அஞ்சல் வாக்குகள் பதிவாகின. கொரோனா (Corona) பரவல் அச்சம் காரணமாக பலர், அஞ்சல் வாக்குகளை செலுத்தினர். பிடென் பெரும்பான்மை வலு பெறும் நிலையை நோக்கி உறுதியாக முன்னேறி வருகிறார். 538 தேர்தல் வாக்குகளில் பெரும்பான்மைக்கு 270 எலக்டோரல் வோட்ஸ் தேவை. தற்போது, பிடனுக்கு (Joe Biden) 264 தேர்தல் வாக்குகள் உள்ளன. அதாவது அவர் 264 இடங்களில் முன்னிலை வகிக்கிறார், டிரம்ப் 214 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறார். பிடென் பெரும்பான்மை எண்ணிக்கையை பெற (270) 6 இடங்களில் வெற்றி பெற்றால் போதும்.
264 இடங்களில் முன்னிலை வகிக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 50.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். மொத்தமாக சுமார் 7 கோடியே 20 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார்.
பென்சில்வேனியா, வட கரோலினா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது முன்னிலை வகிக்கிறார்.
இருப்பினும் ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியாவில் பதிவான வாக்குகளில், இருவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் வித்தியாசம் குறைவாக உள்ளது.
குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) 214 இடங்களில் முன்னிலை வகிக்கிறார். அவர் 48 சதவீத வாக்குகளைபெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 6 கோடியே 86 லட்சம் ஆகும்.
இவர் ஒபாமா செய்த சாதனையை முறியடிக்கும் வகையில், வெற்றியை நோக்கி உறுதியாக முன்னேறி வருகிறார்.
இருப்பினும், பல முக்கிய மாகாணங்ளில் முடிவுகள் இன்னும் வரவில்லை. அதே நேரத்தில், வாக்குகள் எண்ணிக்கை குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்காக டிரம்ப் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
"நேற்று நாங்கள் முன்னணி வகித்த இடங்களில், திடீரென்று நாங்கள் எப்படி பின்வாங்கினோம்" என்று ட்வீட் செய்து ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
ALSO READ: US Elections: டிரம்ப்புக்கு வெற்றியா அல்லது ஜோ ஜெயிப்பாரா? பரபரப்பு தொடர்கிறது…..
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR