கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் தவிக்கும் பிரான்ஸ்! 57200 ஹெக்டேர் காடுகள் சேதம்

France Wildfire mass evacuation: பிரான்சில் இந்த ஆண்டு இதுவரை 57,200 ஹெக்டேர் அளவிலான காட்டுப் பகுதியில் தீப்பிடித்துள்ளது, இது 2006-2021 ஆம் ஆண்டின் முழு ஆண்டு சராசரியை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 11, 2022, 06:20 AM IST
  • France Wildfire mass evacuation: பிரான்சில் இந்த ஆண்டு இதுவரை 57,200 ஹெக்டேர் அளவிலான காட்டுப் பகுதியில் தீப்பிடித்துள்ளது, இது 2006-2021 ஆம் ஆண்டின் முழு ஆண்டு சராசரியை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகம்
கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் தவிக்கும் பிரான்ஸ்! 57200 ஹெக்டேர் காடுகள் சேதம் title=

தென்மேற்கு ஐரோப்பாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீ ஏற்படுத்தி வரும் சேதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெப்பம் குறைவதற்கான அறிகுறியே தென்படாத நிலையில், காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதில், பிரான்ஸ் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பிரான்சில் உள்ள ஜிரோண்டே பகுதியில் தீயினால் 6,200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள காடுகள் எரிந்துள்ளன. இந்த ஆண்டு பிரான்சில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக ஒட்டுமொத்தமாக 57,200 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பிடித்துள்ளது.10,000 குடியிருப்பாளர்கள்வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது

தென்மேற்கு பிரான்சின் கிரினோட் பகுதியில் புதன்கிழமை காட்டுத்தீ பரவியது, பல வீடுகளை அழித்தது. 10,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுமார் 6,200 ஹெக்டேர்களை (15,320) அழித்த தீ, இப்போது அண்டை நாடான லாண்டேஸ் பகுதிக்கும் தீ பரவிவிட்டது.

மேலும் படிக்க | சீனாவை தாக்கும் புதிய வைரஸ் தொற்று: லாங்யா நோய்த்தொற்றின் அறிகுறிகள்

மக்கள் வெளியேற அறிவிப்பு

காட்டுத்தீயின் கோரத்தில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள்ல் வீடுகளை காலி செய்து செல்லும்போது, ஆவணங்கள், செல்லப்பிராணிகள், சில உடமைகளை எடுத்துச் செல்லுமாறு உள்ளூர் நிர்வாகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தீ மேலும் பரவிக் கொண்டிருப்பதால், தீ பரவும் இடங்களில் உள்ள குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு காவல்துறை வீடு வீடாகச் சென்று அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. 

தீயணைப்பு விமானம்

காட்டுத்தீயின் பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு விமானம் மரங்கள் மீது தீ தடுப்பு மருந்தை தெளிக்கிறது. ஐரோப்பாவின் மற்ற பகுதிகளைப் போலவே பிரான்சும் இந்த கோடையில் தொடர்ச்சியான வெப்ப அலைகள் மற்றும் அதன் மோசமான வறட்சியுடன் போராடி வருகிறது.

குறைந்தது எட்டு பெரிய காட்டுத்தீகள் உட்பட நாடு முழுவதும் டஜன் கணக்கான காட்டுத்தீகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. 

மேலும் படிக்க | கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை; பீதியை கிளப்பும் Monkeypox 

காட்டுத்தீயின் கணக்கிலடங்கா சேதங்கள்  
லோசெர் மற்றும் அவேரோன் போன்ற பகுதிகளிலும் தீ பரவியது. மேற்கு பிரான்சில் உள்ள மைனே எட் லோரி என்ற பகுதியில் 1,200 ஹெக்டேர்களுக்கு மேல் உள்ள வனப்பகுதியில் உள்ள மரங்கள் அனைத்தும் தீயினால் கருகிவிட்டன. 

சூரியனுக்கும் கிரணத்தை ஏற்படுத்தும் தீ  
ஆகஸ்ட் 10, 2022 அன்று எடுக்கப்பட்ட இந்தப் படம், காட்டுத்தீயின் புகையால் சூரியன் மேகமூட்டமாக இருப்பதைக் காட்டுகிறது. "தீ அதன் சொந்த காற்றை உருவாக்குகிறது," தீயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் மிகவும் கடினமாகிவிட்டது.

57,200 ஹெக்டேருக்கு மேல் எரிந்து நாசமானது

மேற்கு பிரான்சின் லா ஃபிளேச்க்கு அருகிலுள்ள க்ளெஃப்ஸ்-வால்-டி'அஞ்சோவில் உள்ள வீடுகளுக்கு அருகிலுள்ள காட்டில் தீ எரியும் போது தீயணைப்பு வீரர்கள் தங்கள் வாகனங்களில் நிற்கிறார்கள்.

தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியும் அப்பகுதியில் தீ பரவுவதை நிறுத்தவில்லை. இந்த ஆண்டு பிரான்சில் இதுவரை 57,200 ஹெக்டேர் தீப்பிடித்துள்ளது, இது 2006-2021 ஆம் ஆண்டின் முழு ஆண்டு சராசரியை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகம் என்பது கவலைகளை அதிகரித்துள்ளது. தீயினால் ஐரோப்பிய நாடுகள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகிறது.

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News