கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை; பீதியை கிளப்பும் Monkeypox

Monkeypox in India: கடந்த 14 ஆம் தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 2, 2022, 01:49 PM IST
  • குரங்கம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
  • கடந்த 14 ஆம் தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது.
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை; பீதியை கிளப்பும் Monkeypox title=

குரங்கம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக குரங்கம்மை தொற்று குறித்து மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தன. கேரளாவில் முதலில் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டதை தொடர்ந்து குரங்கு அம்மை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்கும் வழிகாட்டு நெறிகளுடன் கூடிய கடிதத்தை மத்திய சுகாதாரத்துறை அனுப்பியது.

இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது கேரளாவில் 3 பேர், டெல்லி மற்றும் ஆந்திராவில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க | கேரளாவில் குரங்கு அம்மை - தடுப்பூசியும் சிகிச்சை முறையும்!

முன்னதாக, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் அவர் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறினார். உயிரிழந்த இளைஞருக்கு தொடர்புடையவர்கள் விபரம், அவர் பயணித்த இடங்களில் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இந்த நிலையில், கேரளா தனது 5 வது குரங்கு அம்மை தொற்று காய்ச்சலை செவ்வாயன்று (ஆகஸ்ட் 2) பதிவு செய்துள்ளது என ANI அறிக்கை கூறுகிறது. 30 வயதான நோயாளி, தற்போது மலப்புரத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஜூலை 27 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பியதாகவும் கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | இந்தியாவில் மங்கி பாக்ஸ்: அறிகுறிகள் என்ன? இதற்கு சிகிச்சை உள்ளதா? விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News