உலகில் எத்தனை கண்டங்கள்? ஏழா? பூமி ஒரே கண்டமாக மாறினால்? திகைக்க வைக்கும் அறிவியல்

The Next Supercontinent: பூமியின் அனைத்து கண்டங்களும் ஒரு பரந்த நிலப்பரப்பில் ஒன்றிணைந்தால் அது எப்படி இருக்கும் என்பது பற்றி தொலைதூர எதிர்காலத்தை ஆராயும்  புவி இயற்பியலாளர் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 23, 2023, 01:03 PM IST
  • கண்டங்கள் ஒன்றிணைந்தால் பூமி எப்படியிருக்கும்?
  • வியப்பளிக்கும் புவியியலாளரின் கணிப்பு
  • 7 கண்டங்களும் ஒன்றிணைந்தால் சூப்பர்கண்டமா?
உலகில் எத்தனை கண்டங்கள்? ஏழா? பூமி ஒரே கண்டமாக மாறினால்? திகைக்க வைக்கும் அறிவியல் title=

வட அமெரிக்காவும் ஆசியாவும் பூமியில் ஒன்றிணைந்தால் புதிதாக கண்டம் உருவாகலாம் என்று புவி இயற்பியல் விஞ்ஞானி ஒருவர்  கணித்துள்ளார். புவி இயற்பியலாளர் ரோஸ் மிட்செல் சமீபத்தில் வெளியிட்ட "தி நெக்ஸ்ட் சூப்பர் கான்டினென்ட்" (The Next Supercontinent) என்ற தனது புதிய புத்தகத்தில், அவர் கடந்த காலத்தை மட்டுமல்ல, தொலைதூர எதிர்காலத்தையும் அனுமானித்துள்ளார்.

பூமியின் அனைத்து கண்டங்களும் ஒரே பரந்த நிலப்பரப்பில் ஒன்றிணைக்கும்போது பூமி எப்படி இருக்கும் என்பதைப் பற்றி தனது புத்தகத்தில் அவர் அனுமானித்துள்ளார்.  

சுருக்கமான வரலாறு
மிட்செல் நம்மை காலத்தின் வழியாக ஒரு பயணத்தில் அழைத்துச் செல்கிறார், அதில், கடந்த காலத்தில் கண்டங்கள் எவ்வாறு சூப்பர் கண்டங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் அவர், 300 முதல் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்ட டைனோசர்கள் நிறைந்த பசுமையான உலகமான பங்கேயா இருந்ததில் இருந்து தனது கணிப்பைத் தொடங்குகிறார்.

இன்னும் பின்னோக்கிப் பயணிக்கும்போது, ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ரோடினியாவை சந்திக்கிறோம், இது இன்றைய வட அமெரிக்கா மற்றும் கிரீன்லாந்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஒரு தரிசு நிலமாகும். பின்னர், இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சில விஞ்ஞானிகள் நம்புவது போல், சைபீரியாவை மையமாகக் கொண்ட முதல் சூப்பர் கண்டமான கொலம்பியா இருந்தது.

மேலும் படிக்க | அமெரிக்காவை கலக்கப் போகும் சூரியப் புயல்! எங்கு எப்போது எப்படி பாதிக்கும்?

கண்டங்கள் எவ்வாறு நகர்கின்றன?
கண்டங்களின் இயக்கங்களைப் புரிந்துகொள்வதற்கு நுணுக்கமான விசாரணை தேவை. விஞ்ஞானிகள் களப்பணி மூலம் மாதிரிகளை சேகரித்து, பாறையின் வயது மற்றும் அது உருவான அட்சரேகையை தீர்மானிக்கின்றனர்.

சூப்பர் கண்டங்களின் உருவாக்கம் மற்றும் உடைப்பு "திடமான ஆனால் நெகிழ்வான" மேலங்கியின் நடத்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேன்டில் (Mantle) என்பது பூமியின் மேலோடு மற்றும் மையப்பகுதிக்கு இடையே உள்ள அடுக்கு ஆகும், பூமியின் அடர்த்தியான, அதி-சூடான மையப்பகுதிக்கும் அதன் மெல்லிய வெளிப்புற அடுக்கான மேலோடுக்கும் இடையில் உள்ளது.

கண்டங்களின் இயக்கம் என்பது, மேலோட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது ஏற்படுகிறது என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளை விட ஒப்பீட்டளவில் குளிர்ச்சியான மேல் பகுதியில், உள்ள இடத்தை நோக்கி கண்டங்கள் நகர்கின்றன. அப்படித்தான் கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, ஒரு புதிய சூப்பர் கண்டம் உருவாகிறது.

இறுதியில், அந்த மாபெரும் கண்டத்தின் கீழே உள்ள மேற்பகுதியில் வெப்பம் உருவாகத் தொடங்கும் போது, அது மீண்டும் கிழியத் தொடங்குகிறது, இது புதிய பெருங்கடல்களை உருவாக்குவதற்கும் மற்றொரு சுழற்சியைத் தொடங்குவதற்கும் வழிவகுக்கிறது.

மேலும் படிக்க | விவசாயத்திற்கு வித்தியாசமான மானியம்! ட்ரோன்கள் மூலம் விவசாயம் செய்ய ஊக்குவிப்பு

அமாசியா (Amasia)
கடந்த காலத்தின் இந்த அறிவிலிருந்தும், மேன்டில் மெக்கானிக்ஸைப் புரிந்துகொண்டும், மிட்செல் "அமாசியா" என்பது அடுத்த சூப்பர் கண்டமாக உருவாகலாம் என்று கணிக்கிறார். 

பசிபிக் அல்லது அட்லாண்டிக் பெருங்கடல்கள் மறைந்து புதிய கண்டம் உருவாகலாம் என்று சில கோட்பாடுகளுக்கு மாறாக, ஆர்க்டிக் பெருங்கடலின் மறைவால் அமாசியா வெளிப்படும் என்று மிட்செல் கருதுகிறார். அவரது கணிப்பின்படி, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவின் இணைப்பிலிருந்து அமாசியா என்ற கண்டம் உருவாகும். மலைக்கச் செய்யும் விஞ்ஞானம் ஒருபுறம் என்றால் விஞ்ஞானிகளின் கணிப்புகள் ஆளுக்கு ஆள் மாறுபடுபவை.

அமாசியா பற்றிய மிட்செலின் கணிப்புகள் துல்லியமானவையா என்பது ஒரு கேள்வியாகவே உள்ளது. இது நம் வருங்கால சந்ததியினர் கண்டு பிடிக்க வேண்டிய விஷயமாக இருக்கும். இயற்கை தன்னுள் பொதித்து வைத்துள்ள ரகசியங்கள் தோண்டத் தோண்ட வந்துக் கொண்டே இருக்கும். இன்று  நாம் நினைக்கும் ஒன்று நாளை இல்லை என்று மாறும் என்பது, மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்த்துகிறது.

மேலும் ஆன்லைன் சூதாட்ட மோசடியில் 58 கோடி ரூபாய் தோற்ற தொழிலதிபர்! மோசடி அம்பலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News