அதிபரை சிறை பிடித்த ராணுவ வீரர்கள்.. நைஜரில் பெரும் பரபரப்பு!

நைஜர் ராணுவ வீரர்கள் தனது நாட்டி அதிபரை சிறை பிடித்து, தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ள நிகழ்வு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இதை அடுத்து, அரசயல் அமைப்பு கலைக்கப்பட்டு, எல்லைகளை மூடப்படுகின்றன என நைஜீரிய வீரார்கள் அறிவித்தனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 27, 2023, 08:16 AM IST
அதிபரை சிறை பிடித்த ராணுவ வீரர்கள்.. நைஜரில் பெரும் பரபரப்பு! title=

நைஜர் ராணுவ வீரர்கள் தனது நாட்டி அதிபரை சிறை பிடித்து, தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ள நிகழ்வு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இதை அடுத்து, அரசயல் அமைப்பு கலைக்கப்பட்டு, எல்லைகளை மூடப்படுகின்றன என நைஜீரிய வீரார்கள் அறிவித்தனர். புரட்சி வெடித்ததை அடுத்து அதிபர் மொஹமட் பாஸூம் ( Mohamed Bazoum) தனது காவலர்களாலேயே சிறை பிடிக்கப்பட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பு நிலைமையும், பொருளாதார நிலைமையும் மோசமானதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்களிடம் உரையாற்றிய ராணுவ கர்னல் மேஜ் அமடூ அப்த்ரமனே, அவருக்குப் பின்னால் மேலும் ஒன்பது சீருடை அணிந்த சிப்பாய்களுடன், புதனன்று, “நாங்கள் பாதுகாப்புப் படைகள்... உங்களுக்குத் தெரிந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளோம்” என அறிவித்தார். நாட்டில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்றும், எல்லைகள் மூடப்படும் என்றும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை "மறு அறிவிப்பு வரும் வரை" ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

"வெளிநாடுகள் தலையிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று கூறிய ராணுவ கர்னல்,  "நிலைமை சீராகும் வரை நில மற்றும் வான் எல்லைகள் மூடப்படும்; மறு அறிவித்தல் வரை உள்ளூர் நேரப்படி 22:00 முதல் 05:00 வரை இரவு ஊரடங்கு அமுலில் இருக்கும்"  என்றும் கூறினார். உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சிலுக்கு (CLSP) வீரர்கள் செயல்படுவதாக அப்த்ரமேனே கூறினார்.

மேலும் படிக்க | Aliens: செவ்வாய் கிரகத்திலும் ஏலியன்கள்! நிரூபிக்காவிட்டாலும் உண்மை இதுதான்!

ராணுவமும் தேசிய காவலரும் தாக்க தயாராக உள்ளனர்: நைஜரிய அதிபர் அலுவலகம்

இதற்கிடையில், ஜனாதிபதியின் அலுவலகம், "அதிபர் காவலர்கள் தாக்கினர். ஆனால் அவற்றுக்கு தேசிய ஆயுதப்படைகள் மற்றும் தேசிய காவலர்கள் ஆதராவு அளிக்கவில்லை" எனக் கூறியுள்ளது.

"இராணுவமும் தேசிய காவலரும் பதில் தாக்குதல் நடத்தா தாக்க தயாராக உள்ளனர்" என்றும்,  “ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் நலமுடன் உள்ளனர்” என்று அதிபர் அலுவலகம் மேலும் கூறியுள்ளது.

கடந்த  2021ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் அதிபர் Bazoum தேர்ந்தெடுக்கப்பட்டார், வறுமை, நீண்டகால உறுதியற்ற தன்மை மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் ஜிஹாதி கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இந்நிலையில், நைஜீரியா குறித்து கருத்து தெரிவித்த, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், மேற்கு ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் மேற்கத்திய கூட்டாளியாக அவரது முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதிபர் பாஸூமுக்கு அசைக்க முடியாத ஆதரவைத் தெரிவித்தார்.

இதேபோல், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் பாஸூமுக்கு முழு ஆதரவை வழங்கினார். மேற்கு ஆபிரிக்க நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து சர்வதேச கவனத்தையும் கவலையையும் இந்த நிலைமை ஈர்த்துள்ளது.

இதற்கிடையில், பாஸூமின் முகாமுக்கும் ஜனாதிபதி காவலர் தலைவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.  நைஜீரியாவின்அதிபரும் ECOWAS தலைவருமான போலா டினுபுவைச் சந்தித்த பின்னர் மத்தியஸ்தம் செய்ய புதன்கிழமை நைஜருக்குச் செல்வதாக அண்டை நாடான பெனினின் அதிபர் பாட்ரிஸ் டலோன் கூறினார்.

மேலும் படிக்க | அஜித் தோவல் வாங் யீ சந்திப்பு... இணைந்து பணியாற்ற பரஸ்பர மரியாதை - புரிதல் அவசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News