New Year 2022: புத்தாண்டில் பேரழிவுகள் பற்றிய நோஸ்ட்ராடாமஸின் கவலையளிக்கும் கணிப்புகள்

16 ஆம் நூற்றாண்டின் ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் உலக பிரசித்தி பெற்றவை. அவர் கணித்துள்ள எதிர்கால  பேரழிவுகள் என்ன தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2021, 02:20 PM IST
  • இயற்கை பேரழிவுகள் தீவிரமானதாக மாறும்
  • விலைவாசிகள் தொடர்ந்து உயரும்
  • தொற்றுநோயால் பணவீக்கம் அதிகரிக்கும்
New Year 2022: புத்தாண்டில் பேரழிவுகள் பற்றிய  நோஸ்ட்ராடாமஸின் கவலையளிக்கும் கணிப்புகள் title=

புதுடெல்லி: 2022ல் என்ன நடக்கப் போகிறது? நாட்டிலும் உலகிலும் உள்ள ஒவ்வொரு நபரும் எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்கள். நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் அடங்கிய புத்தகம் 'லெஸ் ப்ரொபிடிஸ்' , 1555 ஆம் ஆண்டில் வெளியானது.  

பிரஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளின்படி, 2022ஆம் ஆண்டில் பூமியின் மீது ஒரு சிறுகோள் மோதும். உலகம், வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்படும். பணவீக்கம் மிகவும் அதிகரிக்கும், அதிக அளவிலான மக்கள் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள். 
புவி வெப்பமடைதல் மற்றும் சிறுகோள்கள் மற்றும் AI (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் எழுச்சி ஆகியவற்றால் ஏற்படும் பேரழிவுகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நோஸ்ட்ராடாமஸ் முன்னறிவித்ததாக நம்பப்படுகிறது. 

'அழிவின் தீர்க்கதரிசி' என்று வர்ணிக்கப்படும், பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பப்பட்டு வருகிறது.  

உலக வெப்பமயமாதல்
காலநிலை மாற்றம் மிகவும் மோசமாக இருக்கும், உயரும் வெப்பநிலையால் கடலில் உள்ள மீன்களை 'பாதி வெந்துபோகும்' என்றும் தெரிவித்துள்ளார். இறுதியில், மனிதகுலம் 40 ஆண்டுகளுக்கு மழையைப் பார்க்காது என்றும் கணித்துள்ளார். ஆனால், pala தசாப்தங்களாக மழை வரவேண்டும் என்று வேண்டியவர்களே வெள்ளத்தால் ஏற்படும் அபாயத்தையும் அனுபவிக்க நேரிடும் என்றும் நோஸ்ட்ராடாமஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

 ALSO READ | 16 வயதில் திருமணம் செய்தால் தப்பில்லை’ உ.பி எம்.பி பேச்சு

நாற்பது ஆண்டுகளாக வானவில்லையே பார்க்காமல் வறண்டிருக்கும் பூமியில் மழை பொழியத் தொடங்கினால், உலகமே காணாத வெள்ளமாய் அது கொட்டித் தீர்க்கும் என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சமீப ஆண்டுகளில் உலகம் ஏற்கனவே அழிவுகரமான வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் வறட்சியைக் கண்டுள்ளது, இயற்கை பேரழிவுகள் தீவிரமானதாக மாறும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

சிறுகோள் பூமியைத் தாக்கும்
பூமி ஒரு சிறுகோளுடன் மோதும் என்று கூறும் நோஸ்ட்ராடாஸ், இதனால் வெகுஜன மரணம் ஏற்படும் என்று கணித்துள்ளார். ஆனால், இந்த 'விண்கல்லின்' தாக்குதல் எப்போது நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் வானத்திலிருந்து ஒரு 'பெரிய நெருப்பு' விழும் என்று அவர் எழுதியுள்ளார். பூமியுடனான சிறுகோள் மோதலால், தீ மற்றும் பேரழிவு ஏற்படும்.

உலகளாவிய பஞ்சம் ஏற்படும் என்றும் நோஸ்ட்ராடாமஸ் கணித்தார், இது தோல்வியடைந்த பொருளாதாரத்தில் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும். பஞ்சம் மற்றும் பட்டினியும் மக்களிடையே மோதலை அதிகரிக்கும். கோதுமையின் விலை மிகவும் அதிகமாக இருக்கும், இதனால் பரபரப்பு ஏற்படும் என்று கூறும் இந்த தொலைநோக்கு பார்வை கொண்ட கணிப்பாளர், மனிதன் விரக்தியில் மூழ்கிவிடுவான் என்றும், தவறுகளில் இருந்து மனிதகுலம் ஒருபோதும் கற்றுக்கொள்ளாது, விலைவாசிகள் தொடர்ந்து உயரும் என்று கூறுகிறார்.

Also Read | கலப்புத் திருமணம் செய்பவருக்கு 2.5 லட்சம் நிதி உதவி வழங்கும் மத்திய அரசு!

2021 ஆம் ஆண்டில் உலகளவில், அரசியல் ஸ்திரமின்மை, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் (Corona Pandamic) பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் எரிவாயு விநியோகம் குறைந்து, உணவு மற்றும் எரிசக்தி விலைகளை உயர்த்தியது கவனிக்கத்தக்கது. தலிபான்களின் ஆட்சிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் ஏராளமான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

AI தொழில்நுட்பத்தின் சக்தி
செயற்கை நுண்ணறிவின் எழுச்சியை நோஸ்ட்ராடாமஸ் கணித்ததாகத் தெரிகிறது. கடந்த சில தசாப்தங்களாக தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது, எதிர்காலத்தில் எதுபோன்ற வளர்ச்சிகள் நடக்கும் என்பதை அறிவது கடினம், ஆனால் AI தொழில்நுட்பத்தின் எழுச்சி மூலம் மனிதர்கள் 'அழியாதவர்களாக' மாறுவார்கள் என்று நோஸ்ட்ராடாமஸ் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான பணிகள், திரும்பத் திரும்ப செய்வது போன்ற அல்லது சலிப்பை ஏற்படுத்தக்கூடிய பணியிடங்களில் மனிதர்களுக்குப் பதிலாக அடுத்த ஆண்டு ஒரு மனித உருவ ரோபோவை நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பதையும் கவனத்தில் கொண்டால், பூக்கும் புத்தாண்டு பூவாக மலருமா இல்லை பூவுக்குள் பூகம்பமாக தாக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Also Read | கொரோனாவால் திருமணம் ரத்து செய்யப்பட்டால் 10 லட்சம் ரூபாய்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News