வேலையை விடாதீங்க... சம்பள உயர்வு 300%... இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்!

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தில், பணி நீக்கங்கள் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. Google நிறுவனம் மட்டுமல்ல, பல தொழில்நுட்ப நிறுவனங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மந்தநிலை உட்பட பல காரணங்களுக்காக வேலை நீக்கங்கள் நடைபெற்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 20, 2024, 10:58 PM IST
வேலையை விடாதீங்க... சம்பள உயர்வு 300%... இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்! title=

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தில், பணி நீக்கங்கள் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. Google நிறுவனம் மட்டுமல்ல, பல தொழில்நுட்ப நிறுவனங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மந்தநிலை உட்பட பல காரணங்களுக்காக வேலை நீக்கங்கள் நடைபெற்றன. இந்நிலையில், அதற்கு நேர் மாறாக, ஒரு ஊழியரை தக்க வைத்துக்கொள்ள, வேலையை விட்டு விலக நினைத்தவருக்கு, 300 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி அவரை வெளியே விடாமல், தக்க வைத்துக் கொண்ட செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஊழியரை தக்க வைக்க 300 சதவீத சம்பள உயர்வு கொடுத்த கூகுள் நிறுவனம்

பப்ளிக்சிட்டி ஏ ஐ என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ், இந்த ஆச்சரியமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதன் மூலம் தொழில்நுட்ப நிறுவனங்கள், திறமையான ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது என்பது தெரிய வந்துள்ளது. அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட  Perplexity AI என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் சிஇஓ என்பது குறிப்பிடத்தக்கது.

Perplexity AI  நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட பரபரப்பு தகவல்

அரவிந்த் ஸ்ரீநிவாஸ் இது குறித்து மேலும் கூறுகையில் தனது நிறுவனத்தில் சேரவிருந்த கூகுள் நிறுவன ஊழியர் ஒருவருக்கு, சம்பளத்தை மிகவும் உயர்த்தி தக்க வைத்துக் கொண்டது வியப்பளிக்கிறது என்றார். இத்தனைக்கும் அந்த ஊழியருக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில்நுட்பம் அறிந்தவர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பணி நீக்கம் மற்றும் சம்பள உயர்வுக்கான அளவுகோல்கள்

ஆட்குறைப்பு மற்றும் சம்பள உயர்வுக்கான அளவுகோல்கள் குறித்து தெரிவித்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ், நிறுவனங்கள் யாரை தக்க வைப்பது, யாரை பணி நீக்கம் செய்வது என்பதை தீர்மானிக்க, எந்தவிதமான அளவுகோலை பயன்படுத்துகின்றன என்பதில் ஒரு நிச்சயமற்ற நிலை உள்ளது என்றார். பொதுவாக நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யும்போது, அதிக ஊதியம் பெறும் ஊழியர்களை குறி வைப்பதாக அவர் கூறினார். மிக அதிக ஊதியம் பெற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், போதுமான செயல் திறனை காட்டாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், ஒரு தெளிவான அளவுகோல் இல்லை என்று அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறினார்.

மேலும் படிக்க | ராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா பாகிஸ்தான்... நீடிக்கும் குழப்பம்..!!

Google நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட பணி நீக்கங்கள்

2024 ஆம் ஆண்டின் தொடக்க முதலிலேயே கூகுள் நிறுவனத்தில் பல பிரிவுகளில் பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. Google நிறுவனத்தின் ஹார்டுவேர், சென்ட்ரல் இன்ஜினியரிங் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் போன்ற பிரிவுகளில் பணிபுரியும் சுமார் 1000 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக 2023 ஆம் ஆண்டிலும், கூகுள் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. google மட்டுமல்லாது, மெட்டா உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் பல, கடந்த ஆண்டில் பெரிய அளவில் பணி நீக்கங்களை மேற்கொண்டன. இதனால் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டனர். கொரோனா காலத்திற்குப் பிந்தைய மந்த நிலை, மற்றும் ஏழை தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கான காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க | ரஷ்யாவின் கொடூரமான சிறை கூடங்கள்... தினமும் 16 மணிநேர சித்திரவதை..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News