முடிசூட்டு விழாவின் போது மன்னர் சார்லஸ் இந்தியாவின் கோஹினூர் வைரத்தை அணிவாரா..!

முடிசூட்டு தேதி நிர்ணயிக்கப்பட்ட பிறகு எழுந்த முக்கிய கேள்விகளில் ஒன்று, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே  பேசு பொருளாக இருந்த கோஹினூர் வைரத்தை கிங் சார்லஸ் III அல்லது ராணி மனைவி கமிலா அணிவார்களா என்பதுதான்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 10, 2023, 07:00 PM IST
  • ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பேசு பொருளாக இருந்த கோஹினூர் வைரம்.
  • மூன்றாம் சார்லஸ் அரசரின் முடிசூட்டு விழா மே 2023 இல் நடைபெற உள்ளது.
  • முடிசூட்டு விழாவின் போது சார்லஸின் மனைவி ராணி கமிலாவும் முடிசூட்டப்படுவார்.
முடிசூட்டு விழாவின் போது மன்னர் சார்லஸ் இந்தியாவின் கோஹினூர் வைரத்தை அணிவாரா..! title=

கடந்த ஆண்டு ராணி எலிசபெத்தின் மரணம் அடைந்ததை அடுத்து, நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இப்போது, ராணி எலிசபெத்தின் மகன் மூன்றாம் சார்லஸ் அரியணையை கைப்பற்றி, அடுத்த மாதம் ஆடம்பரமான முடிசூட்டு விழாவுடன் அதை அதிகாரப்பூர்வமாக்க உள்ளார். மூன்றாம் சார்லஸ் அரசரின் முடிசூட்டு விழா மே 2023 இல் நடைபெற உள்ளது. இது சமூக ஊடக சகாப்தத்தில் நடைபெறும் முதல் பிரிட்டிஷ் முடி சூட்டி விழாவாக அமைகிறது. முடிசூட்டு விழாவின் போது சார்லஸின் மனைவி ராணி கமிலாவும் முடிசூட்டப்படுவார்.

முடிசூட்டு தேதி நிர்ணயிக்கப்பட்ட பிறகு எழுந்த முக்கிய கேள்விகளில் ஒன்று, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே  பேசு பொருளாக இருந்த கோஹினூர் வைரத்தை கிங் சார்லஸ் III அல்லது ராணி மனைவி கமிலா அணிவார்களா என்பதுதான்.

மேலும் படிக்க | கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் : குடியரசுத் தலைவரிடம் முறையீடு

கோஹினூர் வைரமானது உலகின் மிகப்பெரிய வெட்டப்பட்ட வைரங்களில் ஒன்றாகும். இது 105 காரட்டுகளுக்கு மேல் எடை கொண்டது மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அரச குடும்ப நகைகளின் ஒரு பகுதியாகும். இந்த வைரமானது இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு ஒரு சீக்கிய மன்னர் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

மன்னர் சார்லஸ் கோஹினூர் வைரத்தை அணிவாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் கோஹினூர் வைரத்தை முடிசூட்டு விழாவில் அணிந்திருக்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மன்னன் சார்லஸ் முடிசூட்டு விழாவில் மிகப்பெரிய, நகைகள் பதிக்கப்பட்ட செயின்ட் எட்வர்ட் கிரீடத்துடன் முடிசூட்டப்படுவார்.

மேலும், ராணி கமிலாவும் தனது கிரீடத்தில் கோஹினூர் வைரத்தை அணிய மாட்டார், ஏனெனில் அவர் ராணி மேரியின் கிரீடத்தை போல் செய்யப்பட்ட வேறொரு கிரீடத்தை அணிந்திருப்பார். கோஹினூர் வைரமானது விக்டோரியா மகாராணியின் கிரீடத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இது தற்போது லண்டன் கோபுரத்தில் மற்ற அனைத்து கிரீட நகைகளுடன் வைக்கப்பட்டுள்ளது. எலிசபெத்தின் மரணத்திற்குப் பிறகு,  சமூக ஊடக பயனர்கள் விவாதம் காரணமாக, கோஹினூர் இந்தியாவில் ஒரு முக்கிய பேச்சாக மாறியது.

மேலும் படிக்க | ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்... டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News