அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளதாக மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா துருப்புக்களை அனுப்பினால், அது போரை தீவிரபடுத்தற்கான கடுமையான நடவடிக்கையாக கருதப்படும் என்று அவர் எச்சரித்தார். ரஷ்ய மண்ணிலோ அல்லது உக்ரைன் மண்ணிலோ தங்களது நாட்டு ராணுவத்தை அனுப்பினால், அதனை தலையீடு என்று தான் நாங்கள் கருதுவோம் என அவர் கூறியுள்ளார். ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் மாஸ்கோவில் அளித்த பேட்டியில் அவ்வாறு கூறினார். ரஷ்யாவில் மார்ச் 15 முதல் 17 வரை தேர்தல் நடைபெற உள்ளது, அதில் புடினுக்கு மேலும் 6 ஆண்டுகள் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அணு ஆயுதப் போர் சூழல் உடனடியாக உருவாகி விட்டது என கூறவில்லை: புடின்
புடின் அணு ஆயுதப் போர் உடனடியாக நடத்தும் சாத்தியமில்லை என்றும் உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை என்றும் கூறிய ரஷ்ய அதிபர், "அணு ஆயுத போருக்கான இராணுவ - தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், ரஷ்யா நிச்சயமாக தயாராக உள்ளது. “ ரஷ்யப் பகுதியிலோ அல்லது உக்ரைனிலோ அமெரிக்கப் படைகளை அனுப்பினால், அது அன்னிய நாடு உள்நாட்டில் தலையிடுவதாகக் கருதும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும்” என்று புடின் கூறினார். புடின் மேலும் கூறுகையில், அணு ஆயுதப் போர் சூழல் உடனடியாக உருவாகி விட்டது என கூறவில்லை. ஆனால் நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம் என்றார்.
ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் பெரும் நெருக்கடி
உக்ரைன் மீதான பேச்சுவார்த்தைக்கு மேற்கத்திய நாடுகள் மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ள நிலையில், அணு ஆயுதப் போர் குறித்த புட்டினின் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் விவகாரத்தில் தீவிர பேச்சுவார்த்தைக்கு புடின் தயாராக இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது 1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்பாகும். அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பல உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை எதிர்க்கின்றன. ரஷ்யாவில் தாக்குதலை சமாளிக்க ஆயுதங்களையும் வழங்குகின்றன. உக்ரைனில் போரிட மேற்கு நாடுகள் படைகளை அனுப்பினால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என முன்னதாகவும் பலமுறை ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.
இரண்டு வருட காலத்திற்கும் மேலாக நீடிக்கும் ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புடின், 2022 பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினார். இரண்டு ஆண்டு கால தொடர் ராணுவ நடவடிக்கையில், ரஷ்யா உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கின் மீது கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டுள்ளதோடு, மிக வேகமாக முன்னேறி வருகிறது. அதே சமயம், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை ஆதரிப்பதால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் வர இருப்பதால், அதிபர் பிடென், உக்ரைன் போருக்கான செலவினங்களைக் குறைக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ