Shocking! 3 வாரங்களில் 5 பெண்களை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது!

3 வாரங்களில் ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 14 வயது கைது செய்யப்பட்ட தகவல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2021, 08:07 PM IST
  • 3 வாரங்களில் 5 பெண்களை வன்கொடுமை செய்தது 14 வயது மைனர்?
  • வெவ்வேறு நபர்கள் கொடுத்த புகாரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்
  • அடையாளம் காட்டப்படும் நபர் 14 வயது சிறுவன் என்பதால் அதிர்ச்சி பிறகு அவன் கைது
Shocking! 3 வாரங்களில் 5 பெண்களை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது! title=

லண்டன்: 3 வாரங்களில் ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 14 வயது கைது செய்யப்பட்ட தகவல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியது. 

லண்டனைச் சேர்ந்த சிறுவன் செய்த பாலியல் வன்கொடுமை அனைவரின் மனதிலும் பல்வேறு விதமான அச்சங்களை ஏற்படுத்தியுள்ளன. பாலியல் வேட்டையாடும் சிறுவனின் பாலியல் வேட்கை இவ்வளவு மோசமானாதாக இருக்குமா என்ற திகிலையும் ஏற்படுத்தியுள்ளதாக் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் லீட்ஸில் ஐந்து பாலியல் வன்கொடுமைகளை செய்ததான சந்தேகத்தின் பேரில் 14 வயது சிறுவனை குற்ற விசாரணைத் துறை (Crime Investigation Department (CID)) கைது செய்துள்ளது.

Also Read | 5000 ஆண்டு பழமையான, 22,400 லிட்டர் பீர் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு

கடந்த இரண்டு வாரங்களாக பெண்களுக்கு எதிராக பல தாக்குதல்கள் நடந்துள்ளன. அவை தொடர்பான புகார்களை காவல்துறை விசாரித்து வந்தது. விசாரணையின் போது, வெவ்வேறு இடங்களில் ஐந்து பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வன்கொடுமை செய்த நபர் ஒரே மாதிரியானவர் என்பது தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த அடையாளக் குறிப்பு ஒன்றோடு ஒன்று ஒத்துப் போனது. அதன் அடிப்படையில் சிஐடி வியாழக்கிழமையன்று மைனர் சிறுவன் ஒருவரை கைது செய்தது.

இந்த அதிர்ச்சியூட்டும் விவகாரம் தொடர்பாக மேற்கு யார்க்ஷயர் (West Yorkshire) காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: "14 வயது சிறுவன், ஐந்து பாலியல் வன்கொடுமைகள் செய்ததான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை லீட்ஸ் மாவட்ட சிஐடி விசாரித்து வருகிறது".

Also Read | 5000 ஆண்டு பழமையான, 22,400 லிட்டர் பீர் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு

இதற்கிடையில், இந்த பாலியல் வன்கொடுமை தாக்குதல்களை பார்த்த யாராவது இருந்தால், அவர்கள் சாட்சியம் அளிக்க முன் வர வேண்டும் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அல்லது குற்றம் நடந்த இடங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமானவர்களை பார்த்திருந்தால், அது பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொள்ள முன் வருமாறு கேட்டுக் கொள்ளுமாறு லீட்ஸ் காவல்துறை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேபோன்ற சூழ்நிலைகளில் வேறு யாராவது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் இருந்தால், அவர்களும் தற்போதாவது காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

Also Read | Master திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வின் ஆட்டம் வீடியோ Viral 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News