விடைபெற்றார் சீம்ஸ்... மீம்ஸ் மூலம் மக்களை கவர்ந்த நாய்!

Cheems Dog Died: சமூக வலைதளங்களில் சீம்ஸ் என்ற பெயரில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற நாய் நேற்று உயிரிழந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 19, 2023, 05:35 PM IST
  • இந்த துக்கச் செய்தியை அவர்கள் இன்ஸ்டாவில் பகிர்ந்தனர்.
  • சீம்ஸிற்கு உரிமையாளர்கள் வைத்த பெயர் பால்ட்ஸி ஆகும்.
  • கடந்த சில மாதங்களாக சீம்ஸ் நாய் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டது.
விடைபெற்றார் சீம்ஸ்... மீம்ஸ் மூலம் மக்களை கவர்ந்த நாய்! title=

Cheems Dog Died: நீங்கள் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் தவமாய் தவம் கிடப்பவர் என்றால் Doge (நாய்) மீம்ஸ் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. பல்வேறு நகைச்சுவை சூழ்நிலைகளில் நாய்களுக்கு இடையேயான உரையாடல் பாணியில் உருவாக்கப்படும் இந்த மீம்ஸ்கள் நெட்டிசன்ஸ் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றவை. இளைஞர்கள் இந்த வகை மீமஸ்களை பகிர்வது மட்டுமின்றி, Doge மீம்ஸ் கதாபாத்திரங்களை தங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு புதிது புதிதாக எண்ணிலடங்கா மீம்ஸ்களை இணையத்தில் அள்ளி வீசியுள்ளனர்.  

அந்த வகையில், அந்த Doge மீம்ஸில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் சீம்ஸ் நாய் சமீபத்தில்  நோய்வாய்ப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் சீம்ஸ் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கை இணையம் முழுவதும் இருந்தது. இந்நிலையில், சீம்ஸ் நாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டாக அதன் உரிமையாளர் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

சீம்ஸ் நாய் உயிரிழந்த சோகமான செய்தியை அதன் உரிமையாளர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தனர். ஷிபா-இனு இன நாயான சீம்ஸ் இனி கண்களை திறக்காது என்றும், ஆறு மாதங்களாக அவரைத் துன்புறுத்திய அவரது கடைசி தோராசென்டெசிஸ் அறுவை சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | 17 வயதே ஆன இளவரசி... இப்போது கடுமையான ராணுவ பயிற்சியில்... ஏன்?

"முதலில், இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு கீமோதெரபி அல்லது வேறு சாத்தியமான சிகிச்சையை ஏற்பாடு செய்ய நாங்கள் விரும்பினோம், ஆனால் இப்போது அது மிகவும் தாமதமாகிவிட்டது," என்று அவர்கள் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். சீம்ஸ் மகிழ்ச்சியாக இருந்த சில படங்களை அவர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர்.

இன்ஸ்டாகிராம் பதிவு: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cheems_Balltze (@balltze)

சீம்ஸின் உயிரிழப்பு அவரின் மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு ஒரு பெரிய அடி என்பதை அவர்கள் அறிவார்கள், ஆனால் அவர்கள் சோகமாக இருக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக அவரது உண்மையான பெயரான பால்ட்ஸே உலகிற்கு கொண்டு வந்த மகிழ்ச்சியை நினைவில் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்.

"உங்களையும் என்னையும் இணைக்கும் வட்டமான, சிரித்த முகத்துடன் ஒரு ஷிபா-இனு, அவர் கொரோனா நெருக்கடியின் போது பலருக்கும் உதவியுள்ளார் மற்றும் உங்களில் பலருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளார், ஆனால் இப்போது அவரது பணி நிறைவடைந்தது," என்று அவர்கள் கூறினர்.

"அவர் சுதந்திரமாக வானத்தில் பறக்கிறார் மற்றும் அவரது புதிய நண்பர்களுடன் ஒரு சுவையான உணவை அனுபவிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் எப்போதும் என் இதயத்தில் இருப்பார். ஆன்லைன் உலகில் உள்ள அனைவருக்கும் அவர் தொடர்ந்து மகிழ்ச்சியைத் தருவார் என்று நம்புகிறேன், அதுவே எனது ஒரே வேண்டுகோள்" என அவர்கள் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். 

சீம்ஸ் மிகவும் கடினமான மாதங்களை எதிர்கொண்டதால், அவர்களுக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர். இப்போது சீம்ஸின் மருத்துவச் செலவுகளுக்காக அவர்கள் சேகரித்த பணம் விலங்குகளைப் பாதுகாக்கும் அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | ஈபிள் டவரில் ஏறிய நபர்.. பாராசூட்டைக் கட்டிக்கொண்டு குதித்ததால் பரபரப்பு..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News