மீண்டு வாருங்கள் Doge... மீம்ஸ் மன்னனுக்கு உடல்நலக்குறைவு - சீம்ஸ் அனுப்பிய ஆறுதல்!

இணையத்தில் மிகவும் பிரபலமான டாகீ மீமிஸின் உண்மையான நாயான கபோஷூவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 29, 2022, 10:14 AM IST
  • Doge மீம்ஸ் வகைகள் உலகம் முழுவதும் பிரபலம்.
  • அதில், சீம்ஸ் என்ற கதாபாத்திரம் தமிழ்நாட்டில் அதிக கவனம் பெற்றது.
  • நிஜ நாய்களின் முகங்களுக்கு ஏற்ப மீம்ஸ்களில் படங்கள் இடம்பெற்றிருக்கும்.
மீண்டு வாருங்கள் Doge... மீம்ஸ் மன்னனுக்கு உடல்நலக்குறைவு - சீம்ஸ் அனுப்பிய ஆறுதல்! title=

நீங்கள் பேஸ்புக், ட்விட்டரில் அதிக நேரம் செலவழிப்பவராக இருந்தால், Doge (நாய்) மீம்ஸ் குறித்து உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். பல்வேறு நகைச்சுவை சூழல்களை நாய்களுக்கு இடையேயான உரையாடல் பாணியில் உருவாக்கப்படும் இந்த மீம்ஸ்கள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. 

இளைஞர்கள் இந்த வகை மீமஸ்களை பகிர்வது மட்டுமின்றி, Doge மீம்ஸ் கதாபாத்திரங்களை தங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு புதிது புதிதாக எண்ணிலடங்கா மீம்ஸ்களை இணையத்தில் குவித்துள்ளனர். 

உலகம் முழுவதும் இந்த வகை மீம்ஸ்கள் பிரபலம் என்ற சூழலில், தமிழ்நாட்டை மட்டும் இந்த தொற்று விட்டுவிடுமா என்ன?. Doge என்ற  Dogelore மீம்ஸின் தோற்றமே ஒரு நாயை அடிப்படையாக வைத்து முதன்முதலில் 2013ஆம் ஆண்டு பிரபலமானது. ஷிபா இனு இனத்தை சேர்ந்த அந்த நாயின் பெயர் கபோஷூ. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by King Cheems (@cheemsrajah)

மேலும் படிக்க | விஷமாக மாறிய இந்திய இருமல் மருந்து... 18 குழந்தைகள் பலி!

அதாவது முட்டாளாக, அப்பாவியாக, குதுர்கமாக கருத்து தெரிவிக்கும் வகையில்தான் இந்த மீம்ஸ்கள் அமைந்திருக்கும். ஏறத்தாழ இளைஞர்களின் மனநிலையில் உருவாகும் இந்த மீம்ஸ்கள் குபீர் சிரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கும்.  இந்நிலையில், Doge மீம்ஸின் தோற்றுவாயான கபோஷூ நாய்க்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது நெட்டிசன்களை கவலை அடைய செய்துள்ளது. 

ஜப்பானை சேர்ந்த அட்சுகோ சாட்டோ என்ற ஆசிரியரின் வீட்டில் நாய் கபோஷூ வளர்ந்து வருகிறது. கபோஷூவிற்கு தற்போது 17 வயதாகிவிட்ட நிலையில், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல நோய்களால் உடல்நலன் குன்றி காணப்படுகிறது. 

இதுகுறித்து, கபோஷூவின் பராமரிப்பாளர் அட்சுகோ தனது இன்ஸ்டாகிராமில்,"கிறிஸ்துமஸில் இருந்து சாப்பிடுவதையும், குடிப்பதையும் நிறுத்திவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு பசி எடுத்தது. ஆனால், விரைவிலேயே அதன் உடல்நலன் மிகவும் மோசமாகியுள்ளது. 

தனது நாய் மிகவும் மோசமான உடல்நிலை இருப்பதாக தெரிவித்த அவர், உலகெங்கிலும் இருந்து கபோஷூவிற்கு ஆறுதல் கூறி வருபவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார். கபோஷூவிற்கு உடல்நலன் குன்றியதை அடுத்து, மற்றொரு மீம் நாயான பால்ட்ஸி (சீம்ஸ்) தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளது."எனது அன்பையும் சக்தியையும் அனுப்புகிறேன். உனக்கு எனது நல்வாழ்த்துகள்" என சீம்ஸ் தரப்பில் டாகீக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. Doge மீம்ஸின் பிரபல நாய் கதாபாத்திரம் சீம்ஸ். இந்த கதாபாத்திரம் பால்ட்ஸி என்ற நாயை அடிப்படையாக வைத்து வந்தது. இந்த Cheems கதாபாத்திரம் தமிழ்நாட்டில் மிகப் பிரபமான ஒன்று. 

கடந்த நவ. 12ஆம் தேதி கபோஷூ தனது 17ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தது. கபோஷூ பெயரில் Dogecoin என்ற கிரிப்டோகாயினும் உள்ளது. ஒரு Dogecoin-இன் மதிப்பு, 5. 83 ரூபாயாகும்.  

உலகெங்கிலும் கொரோனா தொற்று உள்பட மக்கள் துயரத்தில் இருந்த போதெல்லாம் கவலையை மறந்து சிரிக்க உதவிய மீம்ஸ் மன்னன் தற்போது உடல்நிலை குன்றி இருப்பதை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | 2023 Predictions: அமெரிக்க அதிபர் எலான் மஸ்க், ஜெர்மனி - பிரான்ஸ் போர் ; கணித்தது யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News