ஆன்லைன் சூதாட்ட மோசடியில் 58 கோடி ரூபாய் தோற்ற தொழிலதிபர்! மோசடி அம்பலம்

Online Gambling Scam: ஆன்லைன் சூதாட்டத்தில் ₹ 5 கோடியை வென்ற இந்தியர், தோற்றது 58 கோடி ரூபாய்! சூதாட்ட மோசடி வலையில் விழுந்த தொழிலதிபர்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 23, 2023, 12:38 PM IST
  • 58 கோடி ரூபாய் மோசடி செய்த ஆன்லைன் புக்கி
  • ஆசை காட்டி மோசம் செய்த மோசடி நபர்
  • சுமார் 14 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்
ஆன்லைன் சூதாட்ட மோசடியில் 58 கோடி ரூபாய் தோற்ற தொழிலதிபர்! மோசடி அம்பலம் title=

நாக்பூர்:  ஆன்லைனில் சூதாட்டத்தில் ₹ 5 கோடியை வென்ற இந்தியர் பின்னர் 58 கோடி நஷ்டத்தை சந்தித்ததால், சிறிது நேரத்திலேயே அவரது சந்தோஷம் சோகமாக மாறியது. 5 கோடி ரூபாய் கொடுத்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிப்பதற்கு முன்னதாக அதை விட பல மடங்கு நஷ்டம் ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, ஆன்லைன் சூதாட்டத்தின் அபாயத்தை உணர்த்துகிறது.

"ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, தொழிலதிபரின் அதிர்ஷ்டம் மோசமானது, அவர் ₹ 5 கோடியை வென்றபோது ₹ 58 கோடியை இழந்தார்," என்று மும்பை போலீஸ் கமிஷனர் கூறினார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் 58 கோடி ரூபாயை இழந்துள்ளார், மேலும் சந்தேகத்திற்குரிய புக்கியிடம் விசாரணை நடத்தியதில், நான்கு கிலோ தங்க பிஸ்கட்களுடன் ₹ 14 கோடி ரொக்கம் மீட்கப்பட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் புக்கியாக செயல்படும் சோந்து நவ்ரதன் ஜெயின் என்ற அனந்த், நாக்பூரிலிருந்து 160 கிமீ தொலைவில் உள்ள கோண்டியா நகரில் வசிக்கிறார். "ஆன்லைன் சூதாட்டத்தை லாபம் ஈட்டும் வழி என்று மகாராஷ்டிர மாநில தொழிலதிபரை, சோந்து நவ்ரதன் ஜெயின் நம்பவைத்தார்.

மேலும் படிக்க | I.N.D.I.A: கூட்டணியின் பெயரை ‘இந்தியா’ என வைத்ததால் சிக்கலில் சிக்கிய எதிர்க்கட்சிகள்!

ஆரம்பத்தில் தயங்கிய தொழிலதிபர், இறுதியில் ஜெயின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து, ஹவாலா வியாபாரி மூலம் ₹ 8 லட்சத்தை மாற்றிக் கொடுத்துள்ளார்," என்று நாக்பூர் போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறினார்.

ஆன்லைன் சூதாட்டக் கணக்கைத் திறப்பதற்காக வாட்ஸ்அப்பில் ஒரு இணைப்பை தொழிலதிபருக்கு ஜெயின் கொடுத்துள்ளார். தற்போது புகார் கொடுத்திருக்கும் தொழிலதிபர், அந்தக் கணக்கில் ₹ 8 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டைத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் தொழிலதிபருக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் வரவே, தனது பணத்தைத் திரும்பக் கேட்டதாகவும், ஆனால் ஆன்லைன் சூதாட்ட புக்கி ஜெயின் பணத்தைத் தர மறுத்துவிட்டதாகவும் புகார் கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க | Rice Export Ban: அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த அரசு, ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தது தெரியுமா?

"தொழிலதிபர் சைபர் போலீசில் புகார் செய்தார், இதன் அடிப்படையில், போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்தனர். கோண்டியாவில் உள்ள ஜெயின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சுமார் ₹ 14 கோடி ரொக்கம் மற்றும் நான்கு கிலோ தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டன. அது மட்டுமல்ல, புக்கி ஜெயின் மோசடியில் ஈடுபட்டதற்கு தேவையான அளவு ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று" குமார் போலீஸ் கமிஷனர் கூறினார்.

கோண்டியா நகரில் உள்ள சோந்து நவ்ரதன் ஜெயினின் இல்லத்தை போலீஸார் சோதனை செய்வதற்கு சற்று முன்பு, அவர் தப்பி ஓடிவிட்டார். அவர் துபாய்க்கு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

புக்கி ஜெயின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட பணம் கணக்கிடப்பட்டு வருகிறது, ரொக்கம் அதிகமாக இருப்பதால், கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பது இன்னமும் உறுதியாக தெரியவில்லை. சோந்து நவ்ரதன் ஜெயின், வேறு யாரிடமாவது மோசடி செய்திருக்கிறாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

புகார் அளித்த ஒரு தொழிலதிபரின் புகாரின் பேரில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, இதுபோல, வேறு யாராவது மோசடி செய்யப்பட்டிருந்தாலும், போலீசாரை அணுக தயக்கம் காட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா... அமெரிக்காவில் சூப்பர் மார்கெட்டில் குவிந்த இந்தியர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News