சைவம் சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்கேற்ற டயட் டிப்ஸ்-இதோ..!

சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற டயட்-வெயிட் லாஸ் டிப்ஸ்கள்.

Written by - Yuvashree | Last Updated : Jul 18, 2023, 01:48 AM IST
  • சைவ உணவு சாப்பிடுபவரா நீங்கள்?
  • புரதம் நிறைந்த உணவுகளை உங்கள் டயட் ப்ளானில் சேர்த்து கொள்ளுங்கள்.
  • சில சிம்பிள் டிப்ஸ், இதோ.
சைவம் சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்கேற்ற டயட் டிப்ஸ்-இதோ..! title=

நம்மில் பலர் ஒரு சில காரணங்களுக்காக சைவ உணவு பிரியர்களாக மாறியிருப்போம். ஒரு சிலர் பிறப்பில் இருந்தே சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்களாக இருப்பர். இப்படி சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற டயட்-டிபஸ். 

பலர் தங்கள் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு தங்கள் உணவுத் தேர்வுகளில் கவனம் செலுத்து வருகின்றனர். இதுபற்றிய புரிதலும் இன்றைய இளைஞர்களிடம் நன்றாகவே உள்ளது. இதனால் தற்போது அதிகம் பேர் சைவ உணவு வாழ்க்கை முறையைத் தேர்வு செய்கிறார்கள். நன்கு திட்டமிடப்பட்ட சைவ உணவு ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கைக்கு தேவையானது. இவை, நம் உடலுக்கு தேவையான அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்கலாம். சைவ உணவு சாப்பிடுவோர் சரியாக அந்த உணவை பயன்படுத்தினால் அதை வைத்தே உடலையும் குறைக்கலாம். 

எல்லா உணவுகளுக்கும் முன்னுரிமை கொடுங்கள்..

சைவ உணவு முறையை பின்பற்றும் போது கண்டிப்பாக வேகவைத்த காய்கறிகளை உண்ண வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பழங்கள், காய்கறிகள், பயிர் வகைகள், விதை வகை உணவுகள் என அனைத்துமே அதில் அடங்கும். புரதம், வைட்டமின், கனிமங்கள் ஆகிய வளங்கள் அமைந்த சைவ உணவுகள் இருந்தால் இன்னும் நல்லது. இது. உங்கள் உடல் நலனை பாதுகாக்கவும் உடலில் உள்ள அனைத்து செல்கள் மற்றும் உறுப்புகளுக்கும் உகந்த சக்தி கிடைப்பதை உறுதி செய்யும். பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழங்களில் இது போன்றா சக்திகள் இருக்கும். மேலும், இவை உடல் எடைக்குறைப்பிலும் நல்ல பங்கு வகிக்கும். 

மேலும் படிக்க | சட்டுபுட்டுனு உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்

தாவரம் சார்ந்த உணவுகள்:

சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு புரதச்சத்து அதிகளவில் தேவைப்படும். அசைவ உணவுகளில் இருந்து பெறப்படும் புரதத்தின் அளவு நமக்கு தாவரம் சார்ந்த உணவுகளில் கிடைக்கும் என கூறுகின்றனர் மருத்துவர்கள். பயிர் வகைகள், முளை கட்டிய பயிர் போன்றவை புரதம் தாவரம் சார்ந்த உணவுகள் ஆகும். இதனுடன் நட்ஸ் வகைகளையும் கலந்து சாப்பிட்டால் கண்டிப்பாக உடலில் புரதச்சத்து அதிகரிக்கும். 

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்:

உடல் எடையை குறைக்க ப்ளான் செய்யப்பட்டிருக்கும் டயட் பட்டியலில் கண்டிப்பாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் இருக்க வேண்டும். வைட்டமின் B12, இரும்புச்சத்து, கால்சியம், சிங்க் போன்றவைதான் ஊட்டச்சத்துகள் என அழைக்கப்படுகின்றன. இவை, பெரும்பாலும் அசைவ உணவுகளிலேயே இருக்கும். ஆனால், சில காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து சாப்பிடுகையில் அதற்கேற்ற ஊட்டச்சத்துகள் நமக்கு கிடைக்கின்றன. பச்சை வண்ண காய்கறிகள் மற்றும் ஒரு சில நீர்சத்து நிறைந்த பழங்களில் ஊட்டச்சத்து அதிகமாகவே உள்ளது. 

ஓமேகா சத்து நிறைந்த உணவுகள்:

ஒமேகா 3 என கூறப்படும் சத்து, நம் மூளைக்கு மிகவும் அவசியமான ஒன்று. நம் உள் உறுப்புகளுக்கும் ஏற்படும் குறைப்பாட்டை ஒமேகா 3 குறைக்கும் ஆற்றல் கொண்டிருக்குமாம். இந்த சத்து ஆளி விதைகள், சியா விதைகள், வால் நட்ஸ் ஆகியவற்றில் கிடைக்குமாம். இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் நம் உடலில் நல்ல கொழுப்பு சேரும் என்கின்றனர் மருத்துவர்கள். 

வைட்டமின் டி:

உடலுக்கும்  உடலில் உள்ளிருக்கும் எலும்புகளுக்கும் மிகவும் தேவையானது, வைட்டமின் டி. இது, சூரிய ஒளியினால் பெறப்படும் சத்து ஆகும். காலை வெயிலில் நின்றால் இந்த வைட்டமின் டி நம் உடலுக்கு கிடைக்குமாம். இது தவிர தாவரம் சார்ந்த உணவுகள், பால் ஆகியவையாலும் நம் உடலுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்குமாம். 

மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க உதவும் பொட்டாசியம் நிறைந்த ‘சில’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News