வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை; கண்டனம் தெரிவித்துள்ள ஜப்பான், தென் கொரியா..!!

வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியதை அடுத்து, தென் கொரியா தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 19, 2021, 01:27 PM IST
  • ஜப்பானின் பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிக்கப்பட வேண்டும் என்கிறார் ஜப்பான் பிரதமர்.
  • அமெரிக்காவுடன் பேச வடகொரியா தயாராக இல்லை.
  • அணுசக்தி பேச்சுவார்த்தை இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை; கண்டனம் தெரிவித்துள்ள ஜப்பான், தென் கொரியா..!! title=

சியோல்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) தடையை மீறி, வட கொரியா தனது அணு ஏவுகணை மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. வடகொரியா ஜப்பான் கடலில் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியதாக, தென் கொரியாவின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனை

தற்போதைய ஏவுகணை சோதனைக்கு முன்பாகவும், வட கொரியா (North Korea) ஜப்பான் கடலில் அடையாளம் தெரியாத ஒரு ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய இராணுவம் கூறியது, ஆனால் அது தொடர்பான கூடுதல் தகவல்களை வெளிப்படுத்த முடியவில்லை. ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதனை செய்ததற்காக வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை தடைகளை விதித்துள்ள போதிலும், வடகொரியா சில காலமாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. 

ALSO READ | 40 ஆண்டு ரகசியம் அம்பலம்; கிம் ஜாங் உன்னின் தந்தை கொரிய நடிகையை கடத்திய காரணம்

ஜப்பானிய கடலோர காவல்படை விடுத்துள்ள எச்சரிக்கை 

வட கொரியா செலுத்திய ஏவுகணை பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பானிய அரசாங்கம் கருதுகிறது. ஆபத்தை கருத்தில் கொண்டு, மேலும் சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என ஜப்பானிய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், ஏவுகணை எந்த இலக்கை நோக்கி வீசப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. சமீபத்தில், ஜப்பானின் பிரதமர் பியூமியோ கிஷிடா ஜப்பானின் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தென் கொரியா அழைத்துள்ள அவசர கூட்டம்

வடகொரொயா ஏவுகணை செலுத்தியது தொடர்பாக விவாதிக்க தென் கொரிய அதிபர் அலுவலகம் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்டியது. 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வடகொரியாவுக்கான சிறப்பு தூதர் சங் கிம் எதிர்வரும் நாட்களில் சியோலில், அமெரிக்க நட்பு நாடுகளை சந்தித்து வடகொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து விவாதிக்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாஷிங்டனுக்கும் பியாங்யாங்கிற்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிபந்தனைகள் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற பிடென் நிர்வாகத்தின் யோசனையை ஏற்க வட கொரியா ஏற்க மறுத்துவிட்டது. வட கொரியா தரப்பில், அமெரிக்கா முதலில் தனது கொரிய விரோதக் கொள்கையை கைவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ | வட - தென் கொரியா இடையில் ஹாட்லைன் தொடர்பு மீண்டும் துவக்கம்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News